ஸ்பாண்டியஸ் பின்னேட்டா (L. f.) Kurz. - அனகார்டியேசி

இணையான பெயர் : மாங்கீபெரா பின்னேட்டா L.f.; ஸ்பாண்டியஸ் மாங்கீபெரா Willd.

தமிழ் பெயர் : அம்பாழம்.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : இலையுதிர் மரம், 27 மீ. உயரமானது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வழுவழுப்பானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
சாறு : அழுக்கான வெள்ளை நிறம்.
இலைகள் : கூட்டிலைகள், ஒற்றைபடை சிறகுவடிவக்கூட்டிலைகள் (இம்பேரிபின்னேட்), மாற்றுஅடுக்கமானவை, நுனிக்கிளையில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாகமைந்தவை; மையக்காம்பு (இராக்கிஸ்) 18-50 செ.மீ. நீளமானது; இலைக்காம்பு 5-15 செ.மீ. நீளமானது; சிற்றிலைகள் 4-5 ஜோடிகள் மற்றும் நுனியில் ஒரு சிற்றிலை மட்டும் இருக்கும், சிற்றிலைக்காம்பு 1 செ.மீ. நீளமானது; சிற்றிலை அலகு 6-14 X 5-7 செ.மீ., நீள்வட்ட-நீள்சதுர சிற்றிலை,அலகின் நுனி வால் முதல் அதிக்கூரியது, அலகின் தளம் சமமற்ற வட்டமானது, அலகின் விளிம்பு முழுமையானது, ஜவ்வு அல்லது சப்கோரியேசியஸ்; இரண்டாம் நிலை நரம்புகள் 18 ஜோடிகள், விளிம்பு நரம்புடன் (இண்ட்ராமார்ஜினல் நரம்பு) இணைந்திருக்கும்; மூன்றாம் நிலை நரம்புகள் மையநரம்பை நோக்கி படர்ந்திருக்கும் (அட்மீடியல்லி ராமிபைடு).
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தண்டில் இலைக்கோணங்களில் காணப்படும் பேனிக்கில்; மலர்கள் வெள்ளை, ஒர்பாலானவை மற்றும் இருபாலானவை மலர்கள் (பாலிகேமஸ்), மிகச்சிறிய காம்புடையது.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), முட்டை வடிவானது, 1.5-5 X 1-3.5 செ.மீ. மணமிக்கது, 1-3 விதைகள் கொண்டது.

வாழியல்வு :

பசுமைமாறாக்காடுகள் முதல் அதிக மழை பெறும் இலையுதிர்காடுகளில் காணப்படும்.

காணப்படும் இடம் :

பாலியோட்ராபிக்; மேற்கு தொடர்ச்சி மலைகள் முழுவதும் காணப்படும்.

சான்று ஏடு :

Prelim. Rep. For. & Veg. Pegu. App. A. 44 & B. 42. 1875; Keshava Murthy and Yoganarasimhan, Fl. Coorg (Kodagu) 126. 1990; Gamble, Fl. Madras 1: 259. 1997 (re. ed); Cook, Fl. Bombay 1: 281. 1902; Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 114. 2004; Saldanha, Fl. Karnataka 2: 209. 1996.

Top of the Page