சிம்பளாக்காஸ் அப்டுயுசா Wall. ex G. Don - சிம்பளாக்கேசி

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறிய மரம் 8மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கோணங்களுடையது முதல் கிட்டதட்ட வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலைக்காம்பு 1-2 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 5-12.5 x 2-5 செ.மீ., நீள்வட்ட வடிவானது முதல் தலைகீழ் முட்டை வடிவானது, அலகின் நுனி மெட்டையானது, அலகின் தளம் அட்டனுவேட், அலகின் விளிம்பு ரம்ப பற்களுடையது மற்றும் சிறிது பின்புறம் வளைந்து காணப்படும், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 5-10 ஜோடிகள், ஒன்றொடுன்று விளிம்பின் அருகில் (லுப்) இணைந்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் தளம் நோக்கிய இணையான அகன்ற பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படுபவை ரெசீம் வகை மஞ்சரி, 2-15 செ.மீ. நீளமானது; மலர்காம்பு 0.4 செ.மீ. நீளமானது.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), நீள்வட்ட வடிவானது, 1.6 செ.மீ. நீளமானது.

வாழியல்வு :

மிக உயரமான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1800-2400 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

தென்இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு தொடர்ச்சி மலைகளில்-நீலகிரி மற்றும் ஆனைமலை பகுதிகளில் காணப்படுபவை.

சான்று ஏடு :

Gen. Hist. 4: 3. 1837-1838; Gamble, Fl. Madras 2: 783. 1993 (re.ed.); Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6: 274. 2004; Nooteb., Rev. Symplocac. 244. 1975

Top of the Page