சிம்பளாக்காஸ் ரெசிமொசா Roxb. - சிம்பளாக்கேசி

இணையான பெயர் : சிம்பளாக்காஸ் பொட்டொமை Cl.; சிம்பளாக்காஸ் கேண்டொலியானா Brand.; சிம்பளாக்காஸ் ரெசிமொசா Roxb. ரகம் ரெசிமொசா

Vernacular names : மலையாளப் பெயர்: பாசொட்டியை, பொடிபாரி.

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறிய மரம்.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது; உள்பட்டை கீரிம் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலைக்காம்பு 1.5 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 6.5-12.5 x 3-4.3 செ.மீ., தலைகீழ் ஈட்டி வடிவானது முதல் குறுகிய நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி சிறிது அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது முதல் அட்டனுவேட், அலகின் விளிம்பு ரம்ப பற்களுடையது மற்றும் சிறிது பின்புறம் வளைந்து காணப்படும், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 6-12 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் தளம் நோக்கிய இணையான அகன்ற பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படுபவை, ரெசீம் வகை, 14 செ.மீ. நீளமானது, உரோமங்களுடையது.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), நீள்வட்ட அல்லது நீள்சதுர வடிவானது, 1.5 செ.மீ. நீளமானது; விதைகள் 1-2.

காணப்படும் இடம் :

இண்டோசைனா; மேற்கு தொடர்ச்சி மலைகளில்-தெற்கு, மத்திய மற்றும் தென்மகாராஷ்ட்ரா சாகாயத்திரி பகுதிகளில் காணப்படுபவை.

சான்று ஏடு :

Roxbourgh, Fl. India 2: 539. 1832; Gamble, Fl. Madras 2: 782. 1993 (re.ed.); Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6: 274. 2004. Nooteb., Rev. Symplocac. 273. 1975.

Top of the Page