டபர்னேமாண்ட்டான கேம்ப்லை Subram. & Henry - அப்போசினேசி

இணையான பெயர் : எர்வெட்டோமியா காடேட்டா Gamble

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறுமரம் அல்லது குறுஞ்செடி, 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
சாறு : வெள்ளை நிறமான பால் போன்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கமானவை; ஒர் கனுவிலுள்ள ஜோடி இலைகள் சமமற்றவை; இலைக்காம்பு 1 செ.மீ. நீளமானது, அதன் தளம் அகன்று தண்டைச் சுற்றிய உறை போன்றது; இலை அலகு 6.5-12 X 2.4-4.5 செ.மீ., நீள்வட்டம் அல்லது நீள்வட்ட-ஈட்டி வடிவமுடையது, அலகின் நுனி வால்-அதிக்கூரியது, நுனியின் நீண்ட பகுதி 2 செ.மீ. வரை நீளமானது, அலகின் தளம் கூரியது, உரோமங்களற்றது, அலகின் கீழ்பரப்பு வெளிறிய பச்சை நிறமானது; மையநரம்பு அலகின் பரப்பைவிட மேலெழும்பியது; இரண்டாம் நிலை நரம்புகள் 7-9 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் போன்றது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் இருபாலானவை, தண்டின் நுனியில் காணப்படும் கோரியம்போஸ், சைம், வெள்ளை நிறமானது.
கனி / விதை : பாலிக்கிள், 4 X 1 செ.மீ. நீள்சதுர வடிவானது நுனி வால் போல் நீண்டது; விதைகள் அதிகமானவை, பத்ரி (ஏரில்) கொண்டது.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக அல்லது குறுஞ்செடியாக, பெரும்பாலும் மிதமான உயரமுடைய பசுமைமாறாக்காடுகளில் குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 600-1400 மீ. உயரம் வரையுள்ள மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுபவை - தெற்கு சயாத்திரி.

தற்போதைய நிலை :

குறைந்த பாதிப்புக்குட்பட்டது: பாதுகாத்தல் தேவைப்பொறுத்தது (ஐ.யூ.சி. எண்.., 2000).

சான்று ஏடு :

Bull. Bot. Sur. India 12: 1. 1970; Gamble, Fl. Madras 2: 813. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 285-286. 2004.

Top of the Page