ட்ரன்ஸ்ட்ரோமியா ஜிம்னாந்திரா (Wt. & Arn.) Bedd. - தீயேசி

இணையான பெயர் : க்லையிரா ஜிம்னாந்திரா Wt. & Arn.; ட்ரன்ஸ்ட்ரோமியா ஜப்பானிக்கா Linn.

Vernacular names : கன்னடப் பெயர்: கியாமொனு.

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறிய மரம் 15 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, முதிரும் போது ஒழுங்கற்ற செதில்களாக உதிருபவை; உள்பட்டை பிங்க் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் சிவப்பு நிறமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை, சிறுகிளைகளின் நுனியில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாக காணப்படும்; இலைக்காம்பு 0.5-1.5 செ.மீ. நீளமானது, சிவப்பு நிறமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 4-10 X 1.2-3.5 செ.மீ., நீள்வட்ட வடிவானது முதல் நீள்வட்டம்-தலைகீழ் முட்டை வடிவானது, அலகின் நுனி கூரியது அல்லது மெட்டையானது மற்றும் சிலசமயங்களில் சிறு_பிளவுடையது (ரெட்யூஸ்), அலகின் தளம் டெக்கரண்ட் அல்லது அட்டனுவேட், அலகின் விளிம்பு முழுமையானது மற்றும் பின்புறம் வளைந்து (ரெவலுட்) காணப்படும், உரோமங்களற்றது, கோரியேசியஸ், கரும்பச்சை நிறமானது மற்றும் அலகின் மேற்பரப்பு பளபளப்பானது, அலகின் கீழ்பரப்பு வெளிறியது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட சிறிது பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள், மூன்றாம் நிலை நரம்புகள் மற்றும் பிற நரம்புகள் கண்களுக்கு புலப்படாது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் ஓர் பாலானவை, மஞ்சள் நிறமானது, இலைக்கோணங்களில் காணப்படுபவை அல்லது இலைக்கோணங்களுக்கு சற்று மேல் அமைந்தவை, தனித்தவை; மலர்காம்பு 3 செ.மீ. நீளமானது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), முட்டை வடிவானது அல்லது கோள வடிவமானது, கனியும் போது சிவப்பு நிறமானது; விதைகள் 4-6.

வாழியல்வு :

மிதமான உயரமுடைய மற்றும் மிக உயரமான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில் விளிம்புகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா மற்றும் சைனா; மேற்கு தொடர்ச்சி மலைகளில்-தெற்கு சயாத்திரி மற்றும் மத்திய சயாத்திரி (நீலகிரி) பகுதிகளில் காணப்படுபவை.

சான்று ஏடு :

Temminck, Verh. Nat. Gesch. Bot. 3: 115. t. 17. 1840; Gamble, Fl. Madras 1: 79. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6: 44. 2004

Top of the Page