அக்லையா ஏபியோகார்ப்பா (Thw.) Hiern - மீலியேசி

இணையான பெயர் : மில்நியா ஏபியோகார்ப்பா Thw.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள், தாங்கு வேர்களுடையது (பட்ரஸ்டு), 20 மீ. வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வெளிறிய பிங்க்-ப்ரவுன் நிறமானது, செதில்களாக உதிருபவை; உள்பட்டை சிவப்பு நிறமுடையது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, அடர்த்தியான சிவப்பு கலந்த ப்ரவுன் நிறமுடைய வட்ட வடிவ (பெல்டேட்) செதில்களுடையது. அதன் விளிம்பு நன்கு மெல்லிய பிளவுகளுடையது (பிம்பிரியேட்), லெண்டிசெல் கொண்டது.
சாறு : வெள்ளை நிறமான பால் போன்றது, குறைந்தளவுடையது.
இலைகள் : இலைகள் கூட்டிலைகள், சிறகுவடிவக்கூட்டிலைகள் (பின்னேட்), 42 செ.மீ. வரை நீளமானது மற்றும் 26 செ.மீ. வரை அகலமானது, சுழல் போல் அமைந்தவை; இலைக்காம்பு 15 செ.மீ. வரை நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், செதில்களால் மூடப்பட்டவை, சிறிய மெல்லிய உரோமங்கள் உடையது அல்லது அற்றது; பக்கவாட்டிலுள்ள சிற்றிலைகளின்காம்பு 0.2-1.2 செ.மீ. நீளமானது, கூட்டிலையின் நுனியிலுள்ள சிற்றிலையின் காம்பு 1.6 செ.மீ. வரை நீளமானது; சிற்றிலைகள் ( 3-) 5-9, பக்கவாட்டிலுள்ள சிற்றிலைகள் பொதுவாக கிட்டதட்ட எதிராக அமைந்தவை, அரிதாக தனித்து அமைந்தவை, சிற்றிலையின் அலகு 4-20.5 X 1-7 செ.மீ., அகன்ற நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியதுடன் மழுங்கியவை, அலகின் தளம் ஆப்பு வடிவானது, கோரியேசியஸ், அலகின் விளிம்பு பின்னோக்கி வளைந்தது (ரீகர்வ்டு), துளிர் இலைகள் முழுவதுமாக வட்டவடிவ (பெல்டேட்) செதில்களால் மூடப்பட்டிருக்கும், மையநரம்பு மற்றும் அனைத்து நரம்புகளும் வட்டவடிவ (பெல்டேட்) செதில்களால் மூடப்பட்டிருக்கும், சிற்றிலைகள் முதிரும்போது அலகின் பின்புறத்தில் மட்டும் குறைந்தளவில் வட்டவடிவ (பெல்டேட்) செதில்கள் கொண்டவை; இரண்டாம் நிலை நரம்புகள் 7-10 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை..
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் ஓர்பாலானவை; பேனிக்கிள் வகை மஞ்சரி, அடர்த்தியான லெப்பிடோட் செதில்களால் மூடப்பட்டிருக்கும்; ஆண் மஞ்சரி 9-26 செ.மீ. நீளமானது; பெண்மஞ்சரி 5.5 செ.மீ. நீளமானது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), 4 செ.மீ. நீளமானது, தலைகீழ் முட்டை அல்லது கோள வடிவம் போன்றது, ஏபிகுலேட், சிவப்பானது, இருபிளவுகளுடையது; விதை ஒன்றுடையது.

வாழியல்வு :

மிதமான உயரமுடைய (சப்கேனோப்பி) மரமாக பசுமைமாறாக்காடுகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

தென்இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா.

சான்று ஏடு :

Hooker, Fl. Brit.India.1: 555. 1875; Pannell, A taxonomic monograph of the Genus Aglaia Lour. (Meliaceae), 173. 1992.

Top of the Page