அக்லையா டொமண்டோசா Teijm & Binn. - மீலியேசி

இணையான பெயர் : அக்லையா எக்ஸ்டிப்புலேட்டா (Griffith) Balakr.; அக்லையா மைநூட்டிபுளோரா Bedd.

Vernacular names : மலையாளப் பெயர்: நிர்முள்ளி், நிர்முலை

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 20 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை தாழ்ந்த பிளவுகளுடையது, ப்ரவுன் நிறமானது; உள்பட்டை ப்ரவுன் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, அடர்த்தியாக விளிம்புகளில் மெல்லிய பிளவுகளுடைய சிவப்பு-ப்ரவுன் நிறமான வட்ட வடிவ (பெல்டேட்) செதில்களுடையது மற்றும் நட்சத்திர வடிவ உரோமங்களுடையது .
இலைகள் : கூட்டிலை, ஒற்றைபடை_சிறகு வடிவக்கூட்டிலைகள், ca. 60 செ.மீ. நீளமானது, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போல் அமைந்தது, பல்வினேட்; மத்தியகாம்பு மற்றும் சிற்றிலைக்காம்பு (0.2 செ.மீ. நீளமானது) வட்ட வடிவ (பெல்டேட்) செதில்களுடையது மற்றும் நட்சத்திர வடிவ உரோமங்களுடையது ; சிற்றிலைகள் 5-15, எதிராக அமைந்தவை அல்லது கிட்டத்தட்ட எதிராக அமைந்தவை, 7-15 X 2.5-5 செ.மீ. நீளமானது, குறுகிய நீள்வட்ட வடிவானது அல்லது நீள்சதுர-ஈட்டி வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் சிறிய இதய வடிவானது, வட்டமானது அல்லது ஆப்பு வடிவானது, அலகின் விளிம்பு முழுமையானது அல்லது ஒழங்கற்ற பற்களுடையது, அலகின் மேற்பரப்பு உரோமங்களற்றது , அலகின் கீழ்பரப்பு அடர்த்தியாக நட்சத்திர வடிவ உரோமங்களுடையது ; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 10-14 ஜோடிகள், தெளிவானது; மூன்றாம் நிலை நரம்புகள் சாய்ந்தவாறு பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தண்டின் இலைக்கோணங்களில் காணப்படும் பேனிக்கிள், முதல் 18 செ.மீ. நீளமானது; மலர்கள் கோளவடிவானது, சிறியது, நறுமணமிக்கது; மலர்காம்பு மெல்லியது, அடர்த்தியாக சிவப்பு-ப்ரவுன் நிறமான விளிம்புகளில் மெல்லிய பிளவுகளுடைய செதில்களுடையது மற்றும் நட்சத்திர வடிவ உரோமங்களுடையது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), கோளவடிவானது, முதல் 2.5 செ.மீ. நீளமானது, அடர்த்தியாக சிவப்பு-ப்ரவுன் நிறமான விளிம்புகளில் மெல்லிய பிளவுகளுடைய செதில்களுடையது மற்றும் நட்சத்திர வடிவ உரோமங்களுடையது; ஒரு விதையுள்ள கனி, பத்ரி (ஏரில்) கொண்டது.

வாழியல்வு :

மிதமான உயரமுடைய (சப்கேனோப்பி) மரமாக, மழை அதிகம் பெறும் பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக 450 மற்றும் 900 மீ. உயரத்திற்கு இடைப்பட்ட மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா முதல் ஆஸ்திரேலியா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில் - தெற்கு சயாத்திரி.

சான்று ஏடு :

Nat. Tijdsch. Ned. Ind. 27: 43. 1864; Pannell, A taxonomic monograph of the Genus அக்லையா Lour. (மீலியேசி), 331. 1992; Gamble, Fl. Madras 1: 181.1997 (re.ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 88. 2004;

Top of the Page