English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | மரங்கள் 18 மீ. உயரம் வரை வளரக்கூடியது |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது செதில்களாக உதிருபவை; உள்பட்டை வெளிறிய ஆரஞ்சு நிறமானது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் தடித்தது, லெண்டிசெல் (பட்டைதுளைகள்) உடையது, உரோமங்களற்றது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை, தண்டின் நுனியில் கூட்டமாக மற்றும் நெருக்கமாக அமைந்தவை; இலைக்காம்பு தடித்தவை, 0.7-2 செ.மீ., நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், இலை அலகு 7-16 X 4-8.5 செ.மீ., தலைகீழ் முட்டை வடிவானது, அலகின் நுனி மழுங்கியது, அல்லது வட்டமானது, சிலசமயங்களில் பள்ளங்களுடையது (ஈமார்ஜினேட்), அலகின் தளம் ஆப்பு வடிவம் முதல் கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது, கோரியேசியஸ், அலகின் கீழ்பரப்பு உரோமங்களற்றது மற்றும் மெழுகு பூசியது போன்றது அல்லது சாம்பல் கலந்த நீல நிறமானது (க்களாக்கஸ்), குறுத்து அலகின் கீழ்பரப்பு நுண்ணிய உரோமங்களுடையது; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பைவிட உயர்ந்தது; இரண்டாம் நிலை நரம்புகள் 6-10 ஜோடிகள்; நுனி நோக்கியது, கிளைத்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல்-பெர்க்கரண்ட். |
| மஞ்சரி / மலர்கள் : | மலர்கள் பேனிக்கிள் வகை. |
| கனி / விதை : | முழுச்சதைகனி (பெர்ரி), நீள்வட்ட வடிவானது, 1.4 செ.மீ. நீளமுடையது; விதை ஒன்றுடையது. |