ஆண்டிடெஸ்மா ப்பூனியஸ் (L.) Spreng - ஈபோர்பியேசி

இணையான பெயர் : ஸ்டில்லாகோ ப்பூனியஸ் L.

தமிழ் பெயர் : நாளைதளி

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள், 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை :
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, குறைந்தளவு உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலைக்காம்பு 0.5 செ.மீ. நீளமானது; இலை அலகு 7-18 X 1.5-4 செ.மீ., நீள்வட்ட-நீள்சதுர வடிவம் முதல் ஈட்டி வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது முதல் மழுங்கியது, கீழ்பரப்பு உரோமங்களற்றது மற்றும் அலகின் மேற்பரப்பு சிலசமயங்களில் பளபளப்பானது மற்றும் கரும்பச்சை நிறமானது; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 5-8 ஜோடிகள், விளிம்பில் இணைந்தவை (லுப்); மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் போன்றது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தண்டின் இலைக்கோணங்கள் அல்லது நுனியில் அமைந்தவை; மலர்கள் ஓர்பாலானவை, ஈரகம் கொண்டவை; ஆண்மலர்கள் 8-10 செ.மீ. நீளமானது, சதைப்பற்றுடையது, ஸ்பைக்ஸ், காம்பற்றவை; பெண்மலர்கள் ரெசீம்களில் அமைந்தவை.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), 1-விதையுடையது.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, பசுமைமாறாக்காடுகளில் குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 900 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு சைனா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி காடுகளில் காணப்படுபவை.

சான்று ஏடு :

Syst. Veg. 1. 826. 1825; Gamble, Fl. Madras 2: 1297. 1993 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 409. 2004; Saldanha, Fl. Karnataka 2: 116. 1996.

Top of the Page