அபனாந்தி கஸ்பிடேட்டா (Bl.) Planch. - அல்மேசி

இணையான பெயர் : சைக்ளோஸ்டிமான் கஸ்பிடேட்டம் Bl.; ஜீரொனீயரா கஸ்பிடேட்டா (Bl.) Planc. ex Kurz.; ஜீரொனீயரா ரெட்டிகுலேட்டா Thw.

Vernacular names : தமிழ்ப் பெயர்: கெடிதனி.மலையாளப் பெயர்: பூதியனார்த்தி, தொண்டுபுளியன், காட்டுபிளி.

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள், தாங்கு_வேர்களுடையவை (பட்ரஸ்டு), 30 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, நீள்சதுர வடிவான பெரிய செதில்களாக உரியக்கூடியது; உள்பட்டை சிவப்பு நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கிட்டதட்ட வளையமானது, இளம்பருவத்தில் நுண்ணிய உரோமங்களுடையது, முதிரும் போது உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு_வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு 0.6-1.2 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 10-17.5 X 3-7 செ.மீ., முட்டை-நீள்சதுர வடிவானது அல்லது நீள்வட்டம்-ஈட்டி வடிவானது, அலகின் நுனி குட்டையான குறுகிய கூர்மையான முனையுடையது (கஸ்பிடேட்) முதல் வால்-அதிக்கூரியது, அலகின் தளம் வட்டமானது முதல் சிறிது அட்டனுவேட், அலகின் விளிம்பு முழுமையானது (இளம்பருவத்தில் அலகின் நுனிப்பகுதியில் ரம்ப பற்களுடையது), கோரியேசியஸ், கரும்பச்சை நிறமானது மற்றும் அலகின் மேற்பரப்பு பளபளப்பானது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட சிறிது பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 8-14 ஜோடிகள், நுனி நோக்கி வளைந்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல்-பெர்க்கரண்ட் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் ஓர் பாலானவை, காம்பற்றது அல்லது மிகச்சிறிய காம்புடையது; ஆண் மலர்கள் இலைக்கோணங்களில் காணப்படுபவை, சைம் வகை மஞ்சரி; பெண் மலர்கள் தனித்தவை.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), முட்டை வடிவானது, நீட்சியுடையது, உரோமங்களற்றது; ஒர் விதையுடையது.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக, மழை அதிகம் பெறும் பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 300-1000 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

இந்தியா, மீயான்மார், ஸ்ரீலங்கா மற்றும் இண்டோசைனா; மேற்கு தொடர்ச்சி மலைகளில்-ஆங்காங்கே மத்திய சயாத்திரி பகுதிகளில் காணப்படுபவை.

சான்று ஏடு :

DC, Prodr. 17: 209. 1873; Gamble, Fl. Madras 3: 1349. 1998 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6: 436. 2004

Top of the Page