ஆர்ச்சிடொன்றான் மோனடொல்பம் (Roxb.) Nielson ரகம் மோனடொல்பம் - ஃபேபேசி-மைமோசிஆய்டியா

இணையான பெயர் : மைமோச மோனடொல்பா Roxb.; பித்திகொலபியம் பைஜொமினம் Mart.

Vernacular names : தமிழ்ப் பெயர்: கல்பெக்குமலையாளப் பெயர்: அட்டாப்ரந்தா, காட்டுகென்னா, முத்தா, முத்தாகொலப்பன், பானிவாகா, வாரிகிரி.கன்னடப் பெயர்: காடூ கொண்டமரா

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மிதமான உயரமுடைய மரமாக 12 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் இலைகள் : மரத்தின் பட்டை சிவப்பு-ப்ரவுன் நிறமானது, தெளிவான பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது; உள்பட்டை சிவப்பு-பிங்க் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களுடையது.
இலைகள் : கூட்டிலை, இருமுறை கிளைத்த சிறகுவடிவக்கூட்டிலை (பைபின்னேட்), மாற்றுஅடுக்கமானவை, சுழல் போல் அமைந்தது; இலையடிச்செதில் எளிதில் உதிரக்கூடியவை ; மத்தியகாம்பு 10-11 செ.மீ. நீளமானது, பல்வினேட், முதற்காம்பு மற்றம் இரண்டாம் நிலை காம்புகளில் வட்டவடிவ காம்பற்ற சுரப்பிகள் மேற்புறத்தில் உடையது, உரோமங்களுடையது; சிற்றிலைக்காம்பு 0.4-0.5 செ.மீ. நீளமானது; பின்னே 1-2 ஜோடிகள், எதிரடுக்கமானவை, தளத்திலுள்ள பின்னே நுனியிலுள்ளவையை விட குட்டையானது ; சிற்றிலைகள் 4-8, எதிரடுக்கமானவை, நுனியிலுள்ள சிற்றிலைகள் தளத்திலுள்ளவையை விட பெரியது, 4-14.5 ´1.8-5.5 செ.மீ., குறுகிய நீள்வட்ட வடிவானது முதல் முட்டை வடிவானது, வால்-அதிக்கூரியதுடன் அதன் முனை மூயூக்கரனேட், அலகின் தளம் சமமற்றது அல்லது ஆப்பு வடிவானது முதல் கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது, சார்ட்டேசியஸ், இளம்பருவத்தில் உரோமங்களுடையது ; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 8-14 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் பெர்க்கரண்ட் அல்லது அகன்ற வலைப்பின்னல் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தலை வகை, கோளவடிவானது, மஞ்சரி தண்டின் நுனியில் மற்றும் இலைக்கோணங்களில் காணப்படும் பேனிக்கிள்; மலர்கள் வெள்ளை நிறமானது, காம்பற்றது.
கனி / விதை : பாட் கனி (அவரைப்போன்றது), 10 x 1.5-2 செ.மீ., திருகியது, தட்டையானது, உள்பகுதி சிவப்பு நிறமானது; விதைகள் 3-8, முட்டை வடிவானது, வழவழப்பானது.

வாழியல்வு :

பசுமைமாறாக்காடுகள் மற்றும் பகுதி_பசுமைமாறாக்காடுகளின் விளிம்புகளில் காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1000 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

இந்தியா, மீயான்மார் மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில் - தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி மலைகளில் காணப்படுபவை.

சான்று ஏடு :

Adansonia 19: 21. 1979; Gamble, Fl. Madras 1: 435.1997 (re.ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 162. 2004; Saldanha, Fl. Karnataka 1: 405. 1984; Cook, Fl. Bombay 1: 455. 1903. Almeida Fl. Maharashtra 2:216. 1998.

Top of the Page