ஆர்டீசியா ப்பாஸிபுளோரா Heyne ex Roxb. - மிர்சினியெசி

Vernacular names : மலையாளப் பெயர்: முட்டமரம்

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறியமரங்கள் 6 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : கிளைகள் நிலத்திற்கு கிடைமட்டமானது; சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, அடர்த்தியாக செதில்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலைக்காம்பு 0.5-0.7 செ.மீ. நீளமானது, இலைக்காம்பு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், இளம்பருவத்தில் செதில்களுடையது; இலை அலகு 6-13 x 3.8-4 செ.மீ., குறுகிய நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியதுடன் அதன் முனை மழுங்கியது, அலகின் தளம் ஆப்பு வடிவானது, அலகின் விளிம்பு முழுமையானது, ஒளிபுகும் சுரப்பி புள்ளிகளுடையது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட சிறிது பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 16-20 ஜோடிகள், மெல்லியது; மூன்றாம் நிலை நரம்புகள் கண்களுக்கு புலப்படாது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படும் அல்லது பக்கவாட்டில் காணப்படுபவை, குறைந்தளவு மலர்களுடையது, சைம் வகை அல்லது அம்பல் வகை மஞ்சரி; மலர்கள் வெள்ளை நிறமானது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), கோளவடிவானது, சிவப்பு நிறமானது; ஒரு விதையுள்ள கனி.

வாழியல்வு :

அதிகமானளவில் கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, மிதமான உயரமுடைய மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில் குறிப்பாக 800 மற்றும் 1600 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

தென்இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில் - தெற்கு சயாத்திரி மற்றும் கூர்க் பகுதி (மத்திய சயாத்திரி).

சான்று ஏடு :

Roxb., Fl. Ind. 2: 279.1824; Gamble, Fl. Madras 2: 755.1993 (re.ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 265. 2004; Saldanha, Fl. Karnataka 1: 348. 1984.

Top of the Page