கேசேரியா வைநாடன்சிஸ் Bedd. - ஃப்ளக்கோர்சியேசி

Vernacular names : மலையாளப் பெயர்: கரிகுன்னன்

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறியமரங்கள் 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு_வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலையடிச்செதில் எளிதில் உதிரக்கூடியவை ; இலைக்காம்பு 0.6-1.2 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களுடையது; இலை அலகு 5-15 X 2.5-5 செ.மீ., குறுகிய நீள்வட்ட வடிவானது முதல் நீள்வட்ட வடிவானது-நீள்சதுர வடிவானது, அலகின் நுனி சீராக அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது அல்லது ஆப்பு வடிவானது, அலகின் விளிம்பு ரம்ப பற்களுடையது, ஜவ்வு போன்றது, கீழ்பரப்பில் மையநரம்பு மற்றும் இரண்டாம்_நிலை_நரம்புகளில் உரோமங்களுடையது மற்றும் நரம்புகளுக்கிடையே குறைந்தளவு உரோமங்களுடையது; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பிற்கு சமமானது, தளத்தில் குறைந்தளவு உரோமங்களுடையது; இரண்டாம் நிலை நரம்புகள் 8-12 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் இலைக்கோணங்களில் கூட்டமாக காணப்படுபவை, உரோமங்களுடையது.
கனி / விதை : வெடிகனி (கேப்சியூல்), நீள்வட்ட வடிவானது, முதல் 1 செ.மீ. நீளமானது, கனியும் போது ஆரஞ்ச் நிறமானது; விதைகள் சிவப்பு நிற பத்ரி (ஏரில்) உடையது.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, மழை அதிகம் பெறும் பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1000 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு_தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படும்- மேற்கு ஆனைமலை, பாலக்காடு மலைகள், வயநாடு மற்றும் சிரிங்கேரி பகுதிகளில் காணப்படுபவை.

தற்போதைய நிலை :

உறுபடத்தக்க நிலையில் (வல்நர்புள்) உள்ளவை (ஐ.யூ.சி. எண்., 2000).

சான்று ஏடு :

Briq., Ann. Cons. Jard. Bot. Geneve 62. 1898; Gamble, Fl. Madras 1: 521. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 32. 2004.

Top of the Page