செல்ட்டிஸ் பிலிப்பன்சிஸ் Bl. ரகம் வைட்டியை (Planch.) Soep. - அல்மேசி

இணையான பெயர் : செல்ட்டிஸ் வைட்டியை Planch.

Vernacular names : தமிழ்ப் பெயர்: வெள்ளை துவாரை, பீ நாரி, கொடாலிமுறிக்கி.மலையாளப் பெயர்: பூதாககாலி, கல்லுவிரா, பீ நாரி, வெள்ளக்குயன், பூதா, மானாலி.

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 12 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது; உள்பட்டை ப்ரவுன் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கோணங்களுடையது முதல் கிட்டதட்ட வளையமானது, இளம்பருவத்தில் உரோமங்களுடையது, முதிரும் போது உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு_வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலையடிச்செதில் பக்கவாட்டில் அமைந்தவை, உரோமங்களுடையது, எளிதில் உதிரக்கூடியது மற்றும் தழும்புகளை ஏற்படுத்துகின்றன; இலைக்காம்பு 1-1.5 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், இளம்பருவத்தில் உரோமங்களுடையது; இலை அலகு 4.5-11.5 X 2-5 செ.மீ., நீள்வட்ட வடிவானது முதல் நீள்வட்டம்-முட்டை வடிவானது, அலகின் நுனி கூரியது முதல் அதிக்கூரியது, அலகின் தளம் வட்டமானது அல்லது கூரியது, சிலசமயங்களில் சமமற்றது, அலகின் விளிம்பு முழுமையானது, சார்ட்டோசியஸ் முதல் கோரியேசியஸ், உரோமங்களற்றது; தளத்திலே 3_நரம்புகளை உடையது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 3 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல்-பெர்க்கரண்ட் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படுபவை, சைம் வகை; மலர்கள் பாலிகேமஸ், பெரும்பாலும் புதிய சிறிய நுனிக்கிளைகளில் தோன்றுகின்றன.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), 0.8 செ.மீ. நீளமானது; ஒர் விதையுடையது.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, பசுமைமாறாக்காடுகளில் குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1400 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

இந்தியா, மீயான்மார், ஸ்ரீலங்கா மற்றும் இண்டோசைனா இண்டோசைனா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில்-முழுவதும் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Steenis, Fl. Males. I, 8: 62. 1977; Gamble, Fl. Madras 3: 1349. 1998 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6: 436. 2004

Top of the Page