English   Kannada   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | மரங்கள் 15 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை சாம்பல்-ப்ரவுன் நிறமானது, பெரிய பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் நான்கு கோணங்களுடையது, முதிரும் போது குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கானவை; இலைக்காம்பு 2-3 செ.மீ. நீளமானது, இலைக்காம்பு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை_அலகு 8-15 X 4.5-5 செ.மீ., நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி கூரியது, அலகின் தளம் அட்டனுவேட், அலகின் விளிம்பு முழுமையானது அல்லது சிறிது அலை போன்றது, கோரியேசியஸ், உரோமங்களற்றது மற்றும் கீழ்பரப்பு வெளிறிய நிறமானது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட சிறிது பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 8-12 ஜோடிகள், மெல்லியது; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை அல்லது கண்களுக்கு புலப்படாது. |
| மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படுபவை, சைம் வகை பேனிக்கிள் மஞ்சரி, 8 செ.மீ. நீளமானது, உரோமங்களற்றது; மலர்கள் வெளிறிய மஞ்சள் நிறமானவை; மலர்காம்பு 0.2 செ.மீ. நீளமானது. |
| கனி / விதை : | உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), நீள்வட்ட வடிவானது, சமமற்றது, 3.5 செ.மீ. நீளமானது, உரோமங்களற்றது, கனியும் போது பர்புள் நிறமானது; ஒரு விதையுள்ள கனி. |