சின்னமாமம் ட்ராவான்கேரிக்கம் Gamble - லாரேசி

இணையான பெயர் :

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 8 மீ. உயரம் வரை வளரக்கூடியது
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் மெல்லியது, கோணங்களுடையது நுண்ணிய உரோமங்களை அடர்த்தியாக கொண்டவை.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கம் முதல் எதிரடுக்கம் போன்றது; இலைக்காம்பு 1 செ.மீ.; இலை அலகு 6-11 X 1.5-4 செ.மீ., நீள்வட்டம் அல்லது முட்டை நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி குறுகிய அதிக்கூரியதுடன் மொட்டையான முனையுடையது, அலகின் தளம் ஆப்பு முதல் அட்டனுவேட், அலகின் விளிம்பு முழுமையானது, குறுத்திலைகள் நுண்ணிய உரோமங்களுடையது, முற்றிய பின் உரோமங்களற்றது, சப்கோரியேசியஸ்; மூன்று நரம்புகளை அலகின் தளத்திற்கு சற்று மேல் அமைந்தது; பக்கநரம்புகள் இரண்டும் அலகின் நுனி வரை செல்லாதது; மூன்றாம் நிலை நரம்புகள் விளிம்பை நோக்கிய கிடைமட்டத்தில் இணையான பெர்க்கரண்ட்; மற்ற சிறு நரம்புகள் நெருக்கமான வலைப்பின்னல் போன்றது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி கிட்டதட்ட தண்டின் நுனியிலுள்ளவை அல்லது இலைக்கோணங்களில் காணப்படும் ரெசீம், 5 செ.மீ. நீளமானது; உரோமங்களுடையது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி); விதை ஒன்றுடையது

வாழியல்வு :

அரிதானது, கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, மிதமான உயரமுடைய பசுமைமாறாக்காடுகளில் குறிப்பாக கடல்மட்டத்திலிருந்து 1200 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுபவை.

தற்போதைய நிலை :

உறுபடத்தக்க நிலையில் (வல்நர்புள்) உள்ளவை (ஐ.யூ.சி.எண்., 2000).

சான்று ஏடு :

Kew Bull. 128. 1925; Bull.Bot.Surv. India 25: 119. 1983; Gamble, Fl. Madras 2: 1224. 1993 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 397. 2004; Saldanha, Fl. Karnataka 1: 62. 1996.

Top of the Page