க்ளாசினா அனிசெட்டா (Willd.) J.Hk. ex Benth. - ரூட்டேசி

இணையான பெயர் : க்ளாசினா டென்டேட்டா (Willd.) Roemer; அமைரிஸ்டென்டேட்டா Willd.; க்ளாசினா வில்டீனொவி Wt. & Arn.

Vernacular names : தமிழ்ப் பெயர்: காட்டு-வேப்பிலை, காட்டுகருவேப்பிலை, பொதிமலையாளப் பெயர்: காட்டுகருவேப்பிலா, கரிவேப்பிலா, சுகந்தவேப்பு, பொட்டி

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறிய மரம்.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சிவப்பு-ப்ரவுன் நிறமானது , செதில்களாக உதிருபவை; உள்பட்டை பிங்க் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, சாம்பல் நிறமானது உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் கூட்டிலை, ஒற்றைபடை_சிறகு வடிவக்கூட்டிலைகள், சிலசமயங்களில் இரட்டைபடை_சிறகுவடிவக்கூட்டிலை (பேரிபின்னேட்), சிறுகிளைகளின் நுனியில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாக காணப்படும், மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை, 13-26 செ.மீ. நீளமானது; மத்தியகாம்பு (ராக்கிஸ்) குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, சாம்பல் நிறமானது உரோமங்களுடையது, சிலசமயங்களில் நுண்ணிய உரோமங்களுடையது அல்லது உரோமங்களற்றது; சிற்றிலைக்காம்பு 0.2 செ.மீ. நீளமானது; சிற்றிலை 7-13, 2.5-8 (-12) X 1.3-3.5 (-6.5) செ.மீ., நுனியிலுள்ள சிற்றிலைகள் தளத்திலுள்ளவையை விட பெரியது, முட்டை வடிவானது அலகின் இரு பக்கங்களும் சமமற்றது, அலகின் நுனி அதிக்கூரியதுடன் அதன் முனையில் சிறு_பிளவுடையது (ரெட்யூஸ்), அலகின் தளம் சமமற்றது, அலகின் விளிம்பு முழுமையானது முதல் சிறிய பிறை போன்ற பற்களுடையது, சார்ட்டோசியஸ், ஒளிபுகும் சுரப்பி புள்ளிகளுடையது, அலகின் மேற்பரப்பு மற்றும் கீழ்பரப்பில் மையநரம்பு மற்றும் இரண்டாம்_நிலை_நரம்புகளில் சாம்பல் நிற உரோமங்களுடையது, சிலசமயங்களில் நுண்ணிய உரோமங்களுடையது அல்லது உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 7-11 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படுபவை ரெசீம் வகை மஞ்சரி; மலர்கள் வெள்ளை நிறமானது, மலர்களின் பாகங்கள் நான்கின் மடங்கானது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), கோள வடிவமானது, 1.3 செ.மீ. குறுக்களவுடையது; விதைகள் நீள்சதுர வடிவானது.

வாழியல்வு :

பசுமைமாறாக்காடுகள் முதல் பகுதி_பசுமைமாறாக்காடுகள் வரை கீழ்மட்ட அடுக்கில் (அன்டர்ஸ்டோரி) காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 800 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

இந்தியா, நோபளம், ஸ்ரீலங்கா மற்றும் ஆப்பிரிக்கா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில்-முழுவதும் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Hooker, Niger Fl. 256. 1849; Syn. Hesper. 1: 44. 1846; Gamble, Fl. Madras 1: 155. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6: 80. 2004; Cook, Fl. Bombay 1: 183.1903; Almeida, Fl. Maharashtra 1:205. 1996; Saldanha, Fl. Karnataka 2: 218. 1996.

Top of the Page