குரோட்டன் கிப்ஸோனியனஸ் Nimmo - ஈபோர்பியேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய குறுஞ்செடிகள் முதல் சிறிய மரங்கள், 4 மீ. வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் ஆங்காங்கே நட்சத்திர வடிவ உரோமங்களுடையது, முதிர்ந்த பருவத்தில் உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலைக்காம்பு 5 செ.மீ. நீளமானது; இலை அலகு 7.5-17.8 X 3.2-6.4 செ.மீ., நீள்வட்ட-நீள்சதுர வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது முதல் வால்-அதிக்கூரியது, அலகின் தளம் வட்டமானது, அலகு மற்றும் இலைக்காம்பு இணையுமிடத்தில் 2 காம்புகளுடைய சுரப்பிகள் கொண்டவை, அலகின் தளம் மிக நுண்ணிய ரம்ப பற்களுடையது, கீழ்பரப்பு உரோமங்களற்றது அல்லது சிறிது நட்சத்திர வடிவ உரோமங்களுடையது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 6-8 ஜோடிகளுடையது; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் ஓர்பாலானவை, ஓரகம் கொண்டவை; ஆண்மலர்கள் கூட்டமாகக் காணப்படுபவை, 12-25 செ.மீ. நீளமுடைய மெல்லிய ரெசீம்; பெண்மலர்கள் பொதுவாக தனித்தவை மற்றும் ரெசீமின் தளத்தில் காணப்படுபவை.
கனி / விதை : வெடிகனி (கேப்சூல்) 3 அறைகள் கொண்டது, அடர்த்தியான நட்சத்திர வடிவ உரோமங்களுடையது; 3-விதைகளையுடையது.

வாழியல்வு :

அதிகமாக கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக பசுமைமாறாக்காடுகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுபவை - மத்திய சயாத்திரியில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Graham, Cat. Pl. Bombay 251. 1839; Saldanha, Fl. Karnataka 2: 127. 1996.

Top of the Page