கிரிப்டோகேரியா லாசோனை Gamble - லாரேசி

இணையான பெயர் :

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 20 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, பெரிய லெண்டிசெல் கொண்டது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலைக்காம்பு 1 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 7.5-13 X 2.5-4 செ.மீ., நீள்வட்டம்-நீள்சதுரம் முதல் ஈட்டி வடிவானது, அலகின் நுனி கூரியது முதல் மழுங்கியவை, அலகின் தளம் கூரியது முதல் வட்டமானது, கீழ்பரப்பு உரோமங்களற்றது, அலகின் கீழ்பரப்பு மெழுகு பூசியது போன்றது அல்லது சாம்பல் கலந்த நீல நிறமானது (க்களாக்கஸ்); மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 6-8 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் இலைக்கோணங்களில் அல்லது தண்டின் நுனியில் காணப்படும் பேனிக்கிள், உரோமங்களுடையது.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்) போன்றது, முட்டை வடிவானது, லெண்டிசெல் உடையது, உலரும் போது வரித்தழும்புகளுடையது, 1.5 செ.மீ. குறுக்களவுடையது; விதை ஒன்றுடையது.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக, மிக உயரமான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக 1400-2200 மீ. உயரத்திற்கு இடைப்பட்ட மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுபவை - நீலகிரி, ஆனைமலை மற்றும் சிமோகா (அரிதாக) பகுதிகளில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Bull. Misc. Inform. Kew 1925: 127. 1925; Gamble, Fl. Madras 2: 1218. 1993 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 397. 2004; Saldanha, Fl. Karnataka 1: 64. 1996.

Top of the Page