English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | மரங்கள் 25 மீ. உயரம் வரை வளரக்கூடியது |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை வெளிறிய ப்ரவுன் நிறமானது, லெண்டிசெல் கொண்டது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, சிறு உரோமங்களுடையவை. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு 0.8-1.5 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், சிறு உரோமங்களுடையது; இலை அலகு 8-25 X 3-11 செ.மீ., நீள்சதுர வடிவானது, சிலசமயங்களில் நீள்வட்டம்-நீள்சதுர வடிவானது, அலகின் நுனி சிறிய அதிக்கூரியது மற்றும் அதன் முனை மொட்டையானது, அலகின் தளம் வட்டமானது அல்லது கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது, கோரியேசியஸ், உரோமங்களற்றது, அலகின் கீழ்பரப்பு மெழுகு பூசியது போன்றது அல்லது சாம்பல் கலந்த நீல நிறமானது (க்களாக்கஸ்); மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 7-13 ஜோடிகள், தெளிவானது, விளிம்பை நோக்கியவாறு காணப்படுபவை; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற பெர்க்கரண்ட், மெல்லியது; மற்ற நரம்புகள் நெருக்கமான வலைப்பின்னல் போன்றது. |
| மஞ்சரி / மலர்கள் : | மலர்கள் இலைக்கோணங்களில் அல்லது தண்டின் நுனியிலுள்ள பேனிக்கிள், மலர்கள் நெருக்கமற்றவை. |
| கனி / விதை : | உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்) போன்றவை, கோளவடிவானது, வழுவழுப்பானது, 1.5 செ.மீ. குறுக்களவுடையது; விதை ஒன்றுடையது. |