டில்லினியா பென்டாகைனா Roxb. - டில்லினியேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : உயரமான இலையுதிர் மரம், 15 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல் கலந்த வெள்ளை நிறம், பெரிய செதில்களாக உதிருபவை.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை, நுனிக்கிளையில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாகமைந்தவை; இலைக்காம்பு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், தளத்தில் உறை போன்று தண்டைச் சுற்றி காணப்படும் மற்றும் இலை உதிர்ந்த பின் வட்டவடுக்களை ஏற்படுத்துகின்றன; இலை அலகு 60 X 20 செ.மீ., அகன்ற தலைகீழ் முட்டை வடிவானது, அலகின் நுனி கூரியது அல்லது சிறிய அதிக்கூரிய முனையுடையது, அலகின் தளம் ஆப்பு வடிவானது, அலகின் விளிம்பு பற்களுடையது மற்றும் பற்கள் உரோமங்களுடையது, அலகின் பின்புறத்தில் மையநரம்பு மற்றும் அனைத்து நரம்புகளும் உரோமங்களுடையது; மையநரம்பு அலகின் மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் அதிக எண்ணிக்கையில் ஒன்றுக்கொன்று இணையானவை, பற்கள் வரை சென்று முடிவடைகின்றன; மூன்றாம் நிலை நரம்புகள் பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் மஞ்சள் நிறமானவை, தொகுப்பாக இலைகளற்ற சிறுகிளைகளில் உண்டாகின்றன.
கனி / விதை : கோளவடிவானது, வெடிக்காதவை, தடித்த சதைப்பற்றான புல்லி இதழ்களால் மூடப்பட்டவை; விதைகள் ஒர் கார்பல்லில் 1 அல்லது 2 காணப்படும்.

வாழியல்வு :

பசுமைமாறாக்காடுகள் மற்றும் பகுதி பசுமைமாறாக்காடுகளின் விளிம்புகளில் காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1400 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

சைனா முதல் இண்டோமலேசியா; மேற்கு தொடர்ச்சி மலைகள் முழுவதும் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Roxbourgh, Pl. Cor. 20. 1795; Gamble, Fl. Madras 1: 8. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 14. 2004; Saldanha, Fl. Karnataka 1: 186. 1996.

Top of the Page