English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
வளரியல்பு : | மரங்கள் 8 மீ. உயரம் வரை வளரக்கூடியது |
தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை வெள்ளை நிறமானது; உள்பட்டை சிவப்பு கலந்த ப்ரவுன் நிறமானது. |
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் மெல்லியது, உரோமங்களற்றது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது. |
இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலையடிச்செதில் நுண்ணியது, எளிதில் உதிரக்கூடியது; இலைக்காம்பு 1-1.5 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 8-13 X 2.5-5 செ.மீ., நீள்வட்டம் முதல் ஈட்டி வடிவானது, அலகின் நுனி கூரியது முதல் அதிக்கூரியது மற்றும் மழுங்கிய முனையுடையது, அலகின் தளம் கூரியது, அலகின் விளிம்பு விலகி காணப்படும் பிறை போன்ற பற்களுடையது மற்றும் பிறையின் நடுவே சுரப்பிகளுடையது, சார்ட்டேசியஸ், கீழ்பரப்பு உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 8-12 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றது. |
மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரி இருபிரிவுகளுடைய (டைக்காட்டமஸ்) சைம்; மலர்கள் வெள்ளை நிறமானவை, ஓர்பாலானவை; ஓர் சைம் மஞ்சரியின் நடுவிலுள்ள மலர் மிகச்சிறிய காம்புடைய பெண்மலர். |
கனி / விதை : | வெடிகனி (கேப்சூல்), மூன்று 2-பக்க பிளவுகளுடைய வட்ட வடிவானது, விதைகள் 3. |