டையோஸ்பைரஸ் ஃபோலியோலோசா Wall. ex A.DC. - எபனேசி

:

தமிழ் பெயர் : வெள்ளை தூவாரை, வெள்ள தூவாரை

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரம், 12 மீ. உயரம் வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை பழுப்பு நிறமுடையது, வெடிப்புகளுடையது; பட்டையின் உட்புறம் சிவப்பு நிறமுடையது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் மெலிதானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு 0.4-0.9 செ.மீ. நீளமானது, உரோமங்களற்றது; குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட்; இலை அலகு 4-12 X 1-2.7 செ.மீ., ஈட்டி வடிவமுடையது, அலகின் நுனி கூரியது அல்லது வால் போன்று நீண்டு மழுங்கியது, அலகின் தளம் கூரியது முதல் அட்டனுவேட், அலகின் விளிம்பு முழுமையானது, சப்கோரியேசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 8 ஜோடிகள், கிளைத்தது, நுனி நோக்கி வளைந்த நரம்புகள்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் அமைப்பு கொண்டது.
மஞ்சரி / மலர்கள் : ஓர்பால் மலர்கள்; ஆண்மலர்கள் இலைக்கோணங்களில் காணப்படும் சைம், மஞ்சரி காம்புடையது; பெண்மலர்கள் பெரியது, தனித்தவை, இலைக்கோணங்களில் அமைந்த மலர்கள்.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), உருண்டையானது, 2.5 செ.மீ. குறுக்களவுடையது, உதிராத வளரக்கூடிய இலையை போன்று புல்லி இதழ்கள் கொண்டது, 4 விதைகளை உடையது.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 300 மீ. முதல் 1000 மீ. உயரம் வரையான மலைகளிலுள்ள மழை குறைவாக பெறும் (மழை மறைவு) பசுமைமாறாக்காடுகளில் காணப்படுகிறது.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுகிறது - அகஸ்த்திய மலையின் மழை குறைவாக பெறும் (மழை மறைவு) பகுதிகளிலும், பெரியார் பகுதிகளிலும் மற்றும் வருசநாடு மலை அமைந்துள்ள தெற்கு சாயாத்திரி பகுதிகளிலும் காணப்படுகிறது.

சான்று ஏடு :

DC. Prodr. 8. 234. 1844; Singh, Monograph on Indian Diospyros L. (Persimmon, Ebony) Ebenaceae. 107. 2005; Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 271. 2004; Gamble, Fl. Madras 2: 774. 1997 (re. ed).

Top of the Page