டையோஸ்பைரஸ் சில்வட்டிக்கா Roxb. - எபனேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரம், 35 மீ. உயரம் வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை பழுப்பு கலந்த அரக்கு நிறமுடையது, வழுவழுப்பானது, உள்பட்டை சிவப்பு நிறமுடையது
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் மெலிதானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு 0.3-1.2 செ.மீ. வரை நீளமானது, உரோமங்களற்றது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ்; இலை அலகு 6-15 X 3-6 செ.மீ., நீள்வட்டம் முதல் குறுகிய நீள்வட்டம், அலகின் நுனி வால் போன்று நீண்டது மற்றும் திருகியது, அலகின் தளம் கூரியது அல்லது சிறிதளவு அட்டனுவேட், உலர்ந்த அலகின் விளிம்பு பின்புறம் வளைந்து (ரெவலுட்) காணப்படும், சார்ட்டேசியஸ் அல்லது சப்கோரியேசியஸ், உரோமங்களற்றது, காய்ந்த இலை கருப்பு நிறமுடையது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பிற்கு சமமானது அல்லது சிறிது பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 7-9 ஜோடிகள், மெலிதானது; மூன்றாம் நிலை நரம்புகள் பரந்த வலைப்பின்னல்-பெர்க்கரண்ட் அமைப்பு கொண்டது.
மஞ்சரி / மலர்கள் : ஓர்பால் மலர்கள் அல்லது இருபால் மலர்கள்; ஆண்மலர்கள் பச்சை நிறமுடையது, டைகேசியல் சைம்; பெண்மலர்கள் தனித்தவை அல்லது மூன்று மலர்கள் கொண்ட சைம்.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), உருண்டையானது, 2 செ.மீ. வரை குறுக்களவுடையது, உரோமங்களற்றது, பழத்தின் புல்லி இதழ்கள் வளைந்தது; விதைகள் 2-8

வாழியல்வு :

பொதுவாக மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1400 மீ. வரையான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில் காணப்படும்.

காணப்படும் இடம் :

தீபகற்ப இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் தெற்கு மற்றும் மத்திய சாயாத்திரி பகுதிகளில் காணப்படுகிறது.

சான்று ஏடு :

Roxburgh, Pl. Cor. T. 47. 1795; Gamble, Fl. Madras 2: 773. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 272. 2004; Singh, Monograph on Indian Diospyros L. (Persimmon, Ebony) Ebenaceae. 231. 2005; Saldanha, Fl. Karnataka 1: 341. 1996.

Top of the Page