டொடொனியா விஸ்கொசா (L.) Jacq. - சாப்பிண்டேசி

Vernacular names : தமிழ்ப் பெயர்: விரலிமலையாளப் பெயர்: விரலி, க்ரலி, உண்ணதருவிகன்னடப் பெயர்: பெண்ட்ரெ

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய குத்துச்செடி அல்லது சிறிய மரம், 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல்-ப்ரவுன் நிறமானது , வலைப்பின்னல் பிளவுகளுடையது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கோணங்களுடையது முதல் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கிட்டதட்ட வளையமானது, உரோமங்களுடையது.
சாறு :
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை, சிறுகிளைகளின் நுனியில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாக காணப்படும்; இலைக்காம்பு 0.2 செ.மீ. நீளமானது, தடித்தவை, காம்பின் தளப்பகுதி உப்பியது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ்; இலை அலகு 2.5-6.5 X 0.5-1.2 செ.மீ., குறுகிய நீள்வட்ட வடிவானது முதல் தலைகீழ் ஈட்டி வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது முதல் கூரியது மற்றும் நீட்சியுடையது, அலகின் தளம் டெக்கரண்ட், அலகின் விளிம்பு முழுமையானது மற்றும் பின்புறம் வளைந்து (ரெவலுட்) காணப்படும், அலகின் மேற்பரப்பு பளபளப்பானது, உரோமங்களற்றது, ஒட்டும் தண்மையுள்ளவை; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 16 ஜோடிகள், கிட்டதட்ட இணையானவை; மூன்றாம் நிலை நரம்புகள் நெருக்கமான வலைப்பின்னல் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி பேனிக்கிள்டு சைம் வகை, 7 செ.மீ. நீளமானது, தண்டின் நுனியில் அல்லது இலைக்கோணங்களில் காணப்படுபவை; மலர்கள் சிறியவை, பாலிகேமஸ்; மலர்காம்பு 0.5 செ.மீ. நீளமானது.
கனி / விதை : வெடிகனி (கேப்சியூல்), ஜவ்வு போன்றது, தட்டையானது, 3 இறகுடையது; விதைகள் 1-2, கருப்பு நிறமானது.

வாழியல்வு :

மழை குறைவாக பெறும் குத்துச்செடி நிறைந்த காடுகளில் அதிகமானளவில் குத்துச்செடியாகவும் மற்றும் மிக உயரமான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில் விளிம்புகளில் மரமாகவும் காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 2400 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

பான்ட்ரொபிக்; மேற்கு_தொடர்ச்சி மலைகளில்-முழுவதும் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Jack. Enum. Syst. Pl. 19. 1790; Gamble, Fl. Madras 1: 253. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6: 108. 2004; Saldanha, Fl. Karnataka 2: 193. 1996; Cook, Fl. Bombay 1:269. 1903; Almeida, Fl. Maharashtra 1:277. 1996.

Top of the Page