பைக்கஸ் நெர்வொசா Heyne ex Roth - மோரேசி

இணையான பெயர் : பைக்கஸ் அங்குஸ்டிபோலியா Roxb.

Vernacular names : தமிழ்ப் பெயர்: நீர்-ஆல்மலையாளப் பெயர்: ஈச்சமரம், ஈச்சா

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மிகப்பெரிய மரம், தாங்கு_வேர்களுடையவை (பட்ரஸ்டு), 35 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, வழவழப்பானது; உள்பட்டை கிரீம் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது அல்லது உரோமங்களுடையது.
சாறு : வெள்ளை நிற பால் சுரக்கிறது
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலையடிச்செதில் 1 செ.மீ. நீளமானது, முட்டை-ஈட்டி வடிவானது, மெண்மையான உரோமங்களுடையது, மற்றும் உதிர்ந்து வட்டவடுக்களை ஏற்படுத்துகின்றன; இலைக்காம்பு 0.8-3 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 6-18 ´3-8 செ.மீ., குறுகிய நீள்வட்ட-நீள்சதுர வடிவானது, ஈட்டி வடிவானது அல்லது தலைகீழ் ஈட்டி வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது முதல் வால்-அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது, அலகின் விளிம்பு சிறிது அலை போன்றது, சார்ட்டேசியஸ் அல்லது மெல்லிய கோரியேசியஸ், உரோமங்களற்றது, உலரும் போது அலகின் மேற்பரப்பு பச்சை நிறமானது, கீழ்பரப்பு ப்ரவுன் நிறமானது; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 8-13 ஜோடிகள், தெளிவானது; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் போன்றவை அல்லது ஆட்மீடியல்லி ராமிபைடு.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி சைகோனியம், இலைக்கோணங்களில் காணப்படுபவை மற்றும் இலைகளற்ற கிளைகளில், ஜோடியாகவோ அல்லது தனித்தோ காணப்படுபவை, 0.8-1.5 செ.மீ. குறுக்களவுடையது, சப்பைரிபார்ம் போன்றவை; மலர்கள் ஓர் பாலானவை.
கனி / விதை : சைகோனியம், இலைக்கோணங்களில் காணப்படுபவை ஜோடிகள், கோளவடிவானது, சிவப்பு நிறமானது, உரோமங்களற்றது; மஞ்சரிக்காம்பு 2.5 செ.மீ. நீளமானது; சிற்றுலர்கனி (அக்கீன்) வழவழப்பானது.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1200 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா முதல் ஆஸ்திரேலியா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில் – தெற்கு, மத்திய மற்றும் மஹாராஷ்ட்ரா சயாத்திரியிலும் காணப்படுபவை.

சான்று ஏடு :

Roem. & Schult., Syst. Veg. 1: 513. 1817; Gamble, Fl. Madras 3: 1364. 1998 (re.ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 440. 2004; Saldanha, Fl. Karnataka 1: 118. 1984; Cook, Fl. Bombay 2: 647. 1902; Almeida, Fl. Maharashtra 4b: 371. 2003.

Top of the Page