கார்சீனியா டால்போட்டை Raiz. & Sant. - குளுசியேசி

இணையான பெயர் : கார்சீனியா மலபாரிக்கா Talbot; கார்சீனியா ஓவாலிபோலியா J.Hk. ரகம். மேக்ராந்தா J.Hk.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரம் 20 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை மஞ்சள் அல்லது ப்ரவுன் நிறமானது; உள்ப்பட்டை கிரீம் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கோணங்களுடையது, உரோமங்களற்றது, சிலசமயங்களில் நுண்ணிய உரோமங்களுடையது.
சாறு : சாறு கிரீம் நிறமானது, அதிகளவில் உண்டாகின்றன.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கமானவை; இலைக்காம்பு 0.6-2.1 செ.மீ., குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ் அல்லது கேனாலிகுலேட், உலரும் போது சுருக்கங்கள் (ரூக்கோஸ்) அடைகின்றன, தளத்தில் உறை போன்றது; இலை அலகு 7-15 X 3-7.5 செ.மீ., நீள்வட்டம் முதல் குறுகிய நீள்வட்டம் அல்லது குறுகிய முட்டை வடிவானது, அலகின் நுனி பொதுவாக வட்டமானது சிலசமயங்களில் கூரியது, அலகின் தளம் வட்டமானது அல்லது சிறிது அட்டனுவேட், அலகின் விளிம்பு பின்புறம் வளைந்து (ரெவலுட்) காணப்படும், கோரியேசியஸ்; இரண்டாம் நிலை நரம்புகள் ஒன்றுக்கொன்று இணையானவை மற்றும் விளிம்பில் ஒன்றுக்கொன்று இணைந்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் அற்றவை; பால் சுரக்கும் குழாய் அலகின் பின் புறத்தில் தெளிவானது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் ஒர்பாலானவை, ஈரகம் கொண்டவை; ஆண் மற்றும் பெண்மலர்கள் இலைக்கோணங்களில் தொகுப்பாக ஒர் சிறிய மஞ்சரி காம்பில் காணப்படுபவை.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), கோளவடிவானது, 5 செ.மீ. குறுக்களவுடையது; 1-4 விதைகளையுடையது.

வாழியல்வு :

மிதமான உயரமுடைய (சப்கேனோப்பி) மரமாக, அதிக மழை பெறும் பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 800 மீ. வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுபவை - தெற்கு, மத்திய மற்றும் தென்மஹாராஷ்ட்ரா சாயாத்திரி மலைகளில் காணப்படுகின்றன

சான்று ஏடு :

Rec. Bot. Surv. India (ed.2). 16: 14. 1960; Gamble, Fl. Madras 1: 74. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 41. 2004; Saldanha, Fl. Karnataka 1: 207. 1996.

Top of the Page