(க்)களாக்கிடியான் ஹைனியானம் (Wt. & Arn.) Wt. - ஈபோர்பியேசி

இணையான பெயர் : (க்)களாக்கிடியான் வெலூட்டினம் Wt.

Vernacular names : தமிழ்ப் பெயர்: பனிக்காவு.மலையாளப் பெயர்: கைரா, காயாரா.

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறிய மரம்.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ப்ரவுன், முதிரும் போது செதில்களாக உதிருபவை; உள்பட்டை பிங்க் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு_வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலையடிச்செதில் எளிதில் உதிரக்கூடியது மற்றும் தழும்புகளை ஏற்படுத்துகின்றன; இலைக்காம்பு 0.5 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களுடையது; இலை அலகு 14.5 x 5 செ.மீ., முட்டை வடிவானது முதல் நீள்வட்டம்-நீள்சதுர வடிவானது, இரு பக்கங்களும் சமமற்றது, அலகின் நுனி கூரியதுடன் அதன் முனை மூயூக்கரனேட், அலகின் தளம் சமமற்றது, அலகின் விளிம்பு முழுமையானது, அலகின் கீழ்பரப்பு உரோமங்களுடையது; இரண்டாம் நிலை நரம்புகள் 6-8 ஜோடிகள், அலகின் மேற்பரப்பு மற்றும் கீழ்பரப்பு உரோமங்களுடையது; மூன்றாம் நிலை நரம்புகள் விளிம்பு நோக்கிய பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் தொகுப்பாகமைந்தவை, உரோமங்களுடையது; மலர்கள் ஓர் பாலானவை, ஒரகம் கொண்டவை.
கனி / விதை : வெடிகனி (கேப்சியூல்), அழுத்தப்பட்ட வடிவமானது, 3-6 அறைகளுடையது.

வாழியல்வு :

பசுமைமாறாக்காடுகளின் விளிம்புகளில் காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 600-2000 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

இந்தியா, பங்காளதோசம் மற்றும் மீயான்மார்; மேற்கு தொடர்ச்சி மலைகளில்-தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி பகுதிகளில் காணப்படுபவை.

சான்று ஏடு :

Wt. Icon. Pl. Ind. Or. 1907. 1852; Chakrabarty and Ganopadhyay, JETB 19 205. 1995; Gamble, Fl. Madras 21307.1993; Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6 420. 2004; Saldanha, Fl. Karnataka 2 146.1996.

Top of the Page