குளுட்டா டிராவான்கோரிக்கா Bedd. - அனகார்டியேசி

:

தமிழ் பெயர் : செந்குறிஞ்சி, செங்கூரானி.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : உயர்ந்த மரம், 35 மீ. வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : கிளைகள் “ஆப்ரவில் மாதிரி” முறையில் கிளைக்கும், சிறிய நுனிக்கிளைகள் தடித்தும், உரோமங்களற்றும் காணப்படும்.
சாறு : வெண்மையான சாறு, சிறிதளவு சுரக்கும்.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை, நுனிக்கிளையில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாகமைந்தவை; இலைக்காம்பு 0.5 செ.மீ. நீளத்திற்கு குறைவானது, தடிமனாகவும், உரோமங்களற்றது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ்; இலை அலகு 6.5-19 X 1.8-7 செ.மீ., தலைகீழ் ஈட்டி அல்லது கரண்டி வடிவம், அலகின் நுனி மழுங்கிய அல்லது வட்டமானது (சிறிது கூர்மையாக சில மரங்களில் காணப்படும்), அலகின் தளம் ஆப்பு வடிவம் முதல் தண்டொட்டிக் கீழ்வளர்ந்து இலை விளிம்புடன் காணப்படும், அலகின் விளிம்பு முழுமையானது, கோரியேசியஸ், கீழ்பரப்பு உரோமங்களற்றது; மையநரம்பு இலையின் பரப்பிற்கு சமதளமானது, இரண்டாம் நிலை நரம்புகள் 12-18 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் அமைப்பு கொண்டது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் அல்லது தண்டின் நுனியில் அமைந்த பேனிக்கிள், 8-10 செ.மீ. மெல்லிய உரோமங்களுடையது; மலர்கள் இருபாலானவை, வெள்ளை நிறம்.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), தடித்தது, உருண்டை வடிவம், 3.8 செ.மீ. குறுக்களவு, ஒரு விதை கொண்டது.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக, மிதமான உயரமுடைய (கடல் மட்டத்திலிருந்து 600 மீ. - 1400 மீ.) மலைகளிலுள்ள அதிக மழை பெறும் பசுமைமாறாக்காடுகளில் காணப்படும்.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுகின்றன (அகஸ்த்திய மலை, தெற்கு சயாத்திரி).

தற்போதைய நிலை :

குறைந்த பாதிப்புக்குட்பட்டது: பாதிக்கும் தருவாயில் (த்ரட்டண்டு) உள்ளவை (ஐ.யூ.சி. எண்.., 2000).

சான்று ஏடு :

Beddome, Fl. Sylv. 1: 60. 1870; Gamble, Fl. Madras 1: 261. 1997 (re. ed); Mohanan and Sivadasan, Fl. Agasthymala 179. 2002; Mohanan and Henry Fl. Thiruvananthapuram 128. 1994.

Top of the Page