க்ளைகாஸ்மிஸ் பெண்டபில்லா (Retz.) DC - ரூட்டேசி

Vernacular names : மலையாளப் பெயர்: குரும்பன்னல், பானல், பனச்சி

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய குத்துச்செடி முதல் சிறிய மரம் 4 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ப்ரவுன், வழுவழுப்பானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் கூட்டிலை, ஒற்றைபடை_சிறகு வடிவக்கூட்டிலைகள் (அரிதாக 1-சிற்றிலையுடையது), மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; மத்தியகாம்பு (ராக்கிஸ்) பல்வினேட், குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது; சிற்றிலைக்காம்பு 0.2 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; சிற்றிலை 3-5, மாற்றுஅடுக்கமானவை, 9-16.5 X 3.5-5 செ.மீ., நீள்சதுர வடிவானது அல்லது நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி சிறிது அதிக்கூரியதுடன் அதன் முனை மழுங்கியது அல்லது மெட்டையானது முதல் கூரியது, அலகின் தளம் கூரியது, அலகின் விளிம்பு சிறிய பிறை போன்ற பற்களுடையது, ஒளிபுகும் சுரப்பி புள்ளிகளுடையது, உரோமங்களற்றது; இரண்டாம் நிலை நரம்புகள் 7-13 ஜோடிகள், ஒன்றொடுன்று விளிம்பின் அருகில் (லுப்) இணைந்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் அட்மீடியல்லி ராமிபைடு.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படுபவை பேனிக்கிள் வகை மஞ்சரி, உரோமங்களுடையது; மலர்கள் சிறியவை, வெள்ளை நிறமானது, காம்பற்றது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), கோள வடிவமானது, நீட்சியுடையது, 2 செ.மீ. குறுக்களவுடையது; விதைகள் 2-3.

வாழியல்வு :

திரிந்த பசுமைமாறாக்காடுகளின் விளிம்புகளில் கீழ்மட்ட அடுக்கில் (அன்டர்ஸ்டோரி) காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1400 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில்-முழுவதும் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

DC., prodr. 1: 538. 1824, quoad basionym; Gamble, Fl. Madras 1: 153. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6: 81. 2004; Cook, Fl. Bombay 1: 181.1903; Almeida, Fl. Maharashtra 1:207. 1996; Saldanha, Fl. Karnataka 2: 219. 1996.

Top of the Page