கிளிப்டோபெட்டலம் லாசோனை Gamble - செலஸ்ட்ரேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : குத்துச்செடி அல்லது சிறிய மரம்
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, புதிய கிளைகள் தட்டையானது, உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கமானவை; இலைக்காம்பு 0.5 செ.மீ. நீளமானது; இலை அலகு 7.5-8.5 X 2.7-3.5 செ.மீ., நீள்வட்டம்-தலைகீழ் முட்டை வடிவம், அலகின் நுனி மழுங்கியது, அலகின் தளம் ஆப்பு வடிவமுடையது, கோரியேசியஸ், அலகின் விளிம்பு முழுமையானது அல்லது நுனிப்பகுதியில் சில பற்களையுடையது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட சிறிது உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 7-9 ஜோடிகள் தெளிவானது; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைபின்னல் அமைப்பு கொண்டது.
மஞ்சரி / மலர்கள் : இலைக்கோணங்களில் அமைந்த ரெசீம் மஞ்சரி அல்லது அதற்கு சற்று மேல் அமைந்தது, 6-7 மலர்களை உடையது.
கனி / விதை : கேப்சூல், கோள வடிவம் 1-1.6 செ.மீ. நீளமுடையது; விதைகள் கோள வடிவம், ஏரிலேட் (பத்திரி கொண்டது)

வாழியல்வு :

அரிதான கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 800 மீ. முதல் 1500 மீ. உயரம் வரையான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில் காணப்படுகிறது.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படுகிறது - அதிகமாக பெரியார் பகுதியின் கிழக்கு சரிவு, வருசநாடு, பழனி, பாலக்காடு மற்றும் நீலகிரி மலைகளில் காணப்படுகிறது.

தற்போதைய நிலை :

உறுபடத்தக்க நிலையில் (வல்நர்புள்) உள்ளவை (ஐ.யூ.சி.எண்., 2000).

சான்று ஏடு :

Kew Bull. 1916: 131; Gamble, Fl. Madras 1: 204. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 96. 2004.

Top of the Page