ஹோப்பியா எரோசா (Bedd.) van Sloot. - டிப்டிரோகார்ப்பேசி

இணையான பெயர் : பலனோகார்ப்பஸ் எரோசா Bedd.

தமிழ் பெயர் : கருங்கோங்கு

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரம் 18 மீ. உயரம் வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வழுவழுப்பானது, மெல்லியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறுநுனிகிளைகள் மற்றும் இலைக்காம்பு நுண்ணிய உரோமங்களுடையவை.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் அமைப்பு கொண்டது; இலைக்காம்பு தோராயமாக 0.5 செ.மீ. நீளமானது; இலை அலகு 10 - 25 X 3 - 6 செ.மீ., நீள்வட்ட-நீள்சதுர வடிவானது, அலகின் நுனி கூரியது, அலகின் தளம் வட்டமானது அல்லது சிறிய இதய வடிவானது (சப்கார்டேட்), இலை விளிம்பு முழுமையானது, உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்தது; இரண்டாம் நிலை நரம்புகள் 12-14 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல்-பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படும், பேனிக்கிள்ஸ்.
கனி / விதை : உலர்கனி (நட்), தலைகீழ் முட்டை-நீள்சதுர வடிவானது, ஏபிகுலேட், 2.5x1.5 செ.மீ., , நிரந்தரமான புல்லி இதழ்கள் தடித்தது, ட்ரன்கேட்.

வாழியல்வு :

மிதமான உயரமுடைய (சப்கேனோப்பி) மரமாக, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 700 மீ. உயரம் வரையான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில், ஒடைகளின் அருகாமையில் காணப்படுகிறது.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படுகிறது (என்டமிக்) - அகஸ்திய மலை மற்றும் மேற்கு ஆனைமலை (தெற்கு சகாயத்திரி) வையநாடு (மத்திய சகாயத்திரி) காடுகளில் காணப்படுகிறது.

சான்று ஏடு :

Reinwardtia 3: 318. 1956; Gamble, Fl. Madras 1: 84. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 44. 2004.

Top of the Page