இக்சொரா எலங்கேட்டா Heyne ex G. Don. - ரூபியேசி

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறிய மரம் 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வழுவழுப்பானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கானவை; இலையடிச்செதில் இருஇலைக்காம்பிற்கு நடுவே (இண்டர்பீட்டியோலார்) உடையது, எளிதில் உதிரக்கூடியது மற்றும் தழும்புகளை ஏற்படுத்துகின்றன; இலைக்காம்பு 1-1.2 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 7-26.5 X 3-10.2 செ.மீ., அகன்ற நீள்வட்ட வடிவானது முதல் நீள்வட்டம்-தலைகீழ் ஈட்டி வடிவானது, அலகின் நுனி கூரியது, அலகின் தளம் அட்டனுவேட் முதல் டெக்கரண்ட், அலகின் விளிம்பு முழுமையானது, சார்ட்டோசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட சிறிது பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 12-15 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் மெல்லியவை வலைப்பின்னல்-பெர்க்கரண்ட் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தண்டின் நுனியில் காணப்படும் கோரியம்ப் வகை மஞ்சரி, நெருக்கமானது; நீளமான மஞ்சரி காம்புடையது, 15 செ.மீ. நீளமானது, உரோமங்களுடையது; மலர்கள் காம்பற்றது, வெள்ளை நிறமானது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), கிட்டதட்ட கோள வடிவமானது; விதைகள் 2.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கில் (அன்டர்ஸ்டோரி), பசுமைமாறாக்காடுகள் முதல் மழை குறைவாக பெறும் பசுமைமாறாக்காடுகள் மற்றும் பகுதி_பசுமைமாறாக்காடுகளில் காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 300-900 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படும்-தெற்கு, மத்திய மற்றும் தென்மகாராஷ்ட்ரா சாகாயத்திரி பகுதிகளில் காணப்படுபவை.

சான்று ஏடு :

Gen. Hist. 3: 572. 1834; Gamble, Fl. Madras 2: 630. 1993 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6: 218. 2004; Cook, Fl. Bombay 1: 610.1903; Almeida, Fl. Maharashtra 3:23. 2001.

Top of the Page