லிட்சியா காட்டிகா Sald. - லாரேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 6 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வழுவழுப்பானது; ப்ரவுன் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, சாம்பல் நிறமான உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சப்வர்டிசில்லேட்; இலைக்காம்பு 1-2.5 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, அடர்த்தியாக உரோமங்களுடையது; இலை அலகு 9-34 X 6-13 செ.மீ., தலைகீழ் முட்டை, அலகின் நுனி சிறிய அதிக்கூரியது, அலகின் தளம் ஆப்பு வடிவானது, அலகின் விளிம்பு முழுமையானது, சார்ட்டேசியஸ், அலகின் கீழ்பரப்பு மெண்மையான உரோமங்களுடையது, மேற்பரப்பு உரோமங்களற்றது; இரண்டாம் நிலை நரம்புகள் 9-14 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி அம்பல் வகை, 4-5 மலர்களுடையது, பூவடிச்செதில் உரோமங்களுடையவை, ப்பீரியான்ந்த் இதழ்கள் கொண்டவை.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), கோளவடிவானது, 1 செ.மீ. குறுக்களவுடையது, ப்பீரியான்ந்த் நிரந்தரமானது ஆனால் கனியுடன் வளர்வதில்லை; விதை ஒன்றுடையது.

வாழியல்வு :

திரிந்த பசுமைமாறாக்காடுகள் அல்லது பகுதி பசுமைமாறாக்காடுகள் வரை காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1000 மீ. வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுபவை - அரிதாக தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி மலைகளில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Saldanha, Fl. Karantaka 1: 67. 1984; Gamble, Fl. Madras 2: 1235. 1993 (re. ed).

Top of the Page