லிட்சியா மைசூரன்சிஸ் Gamble - லாரேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல் கலந்த ப்ரவுன் நிறமானது, வழுவழுப்பானது; உள்பட்டை வெளிறிய ஆரஞ்சு நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, சிறு உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு 0.5-1 செ.மீ., நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 6.5-12.5 X 1.5-3 செ.மீ., கோட்டு ஈட்டி வடிவம் முதல் கோட்டு நீள்வட்டம், அலகின் நுனி குறுகியவை மற்றும் கூரியது சீராக அதிக்கூரியது, அலகின் தளம் குறுகியவை மற்றும் கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது, உரோமங்களற்றது; இரண்டாம் நிலை நரம்புகள் 6-7 ஜோடிகள், மெல்லியவை; மூன்றாம் நிலை நரம்புகள் கண்களுக்கு புலப்படாது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி அம்பல் வகை, இலைக்கோணங்கள் அல்லது பக்கவாட்டில் அமைந்தவை, காம்பற்றவை அல்லது மிகச்சிறிய மஞ்சரி காம்புடையவை, கொத்தாக அமைந்தவை; மலர்கள் ஒர்பாலானவை.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), நீள்வட்ட வடிவானது, பெரிதான ப்பீரியான்ந்த் கோப்பை மேல் அமர்ந்தவை.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, உயரம் குறைவான முதல் மிதமான உயரமுடைய மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில், கடல் மட்டத்திலிருந்து 200-1800 மீ. உயரத்திற்கு இடைப்பட்ட மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுபவை - தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி மலைகளில் காணப்படுகின்றன.

தற்போதைய நிலை :

அரிதானது மற்றும் பாதிக்கும் தருவாயில் (த்ரட்டண்டு) உள்ளவை (Ahmedullah & Nayar, 1987)

சான்று ஏடு :

Gamble, Bull. Misc. Inform. Kew 1925: 130. 1925; Gamble, Fl. Madras 2: 1236. 1993 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 399. 2004; Saldanha, Fl. Karnataka 1: 69. 1996.

Top of the Page