மலோட்டஸ் ஆட்ரோவீரன்ஸ் Muell.-Arg. - ஈபோர்பியேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 8மீ. வரை வளரக்கூடியது
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்குமானவை, எதிராக அமைந்த ஜோடி இலைகள் சமமற்றவை; இலைக்காம்பு 0.3-2 செ.மீ., குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட்; இலை அலகு 6-14.5 x 2.5-6 செ.மீ., நீள்வட்டம் முதல் தலைகீழ் முட்டை வடிவம், அலகின் நுனி கூரியது முதல் சிறிய அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது அல்லது ஆங்காங்கே பற்களுடையது, உரோமங்களற்றது, அடர்த்தியாக ரெசின் கொண்ட மஞ்சள் நிறமான சுரப்பிகளை இலையின் அடிப்புறத்திலுடையது; இரண்டாம் நிலை நரம்புகள் 7-9 ஜோடிகள், தளத்திலுள்ள ஓர் ஜோடி நரம்பு சிறியது மற்றும் எதிரானவை.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் ஓர்பாலானவை; மஞ்சரி மெல்லிய ரெசீம், 10 செ.மீ. நீளமானது, மலர்காம்பு 0.5 செ.மீ. நீளமானது.
கனி / விதை : வெடிகனி (கேப்சூல்), 2-அறைகளுடையது, வழுவழுப்பானது, சுரப்பிகளுடையது; விதைகள் ஓர் அறையில் ஒன்று.

வாழியல்வு :

பொதுவாக நீரோடைகளின் அருகே பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 600 மீ. வரையுள்ள மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படுபவை - தெற்கு மற்றும் வடக்கு மலபார் கடற்கரை பகுதிகளில் காணப்படுகின்றன.

தற்போதைய நிலை :

உறுபடத்தக்க நிலையில் (வல்நர்புள்) உள்ளவை (ஐ.யூ.சி.எண்., 2000).

சான்று ஏடு :

Linnaea 34: 195. 1865; Gamble, Fl. Madras 2: 1322. 1993 (re.ed.); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 423. 2004.

Top of the Page