மலோட்டஸ் சுப்ரமணியை Ellis - ஈபோர்பியேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறிய மரங்கள் 6 மீ. வரை வளரக்கூடியது
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் தட்டையானது, லெண்டிசெல் உடையது, இளம்குறுத்தில் ஆங்காங்கே நட்சத்திர வடிவ ப்ரவுன் நிறமான உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கமானவை, எதிரேமைந்த ஜோடி இலைகள் சமமற்றது; இலையடிச்செதில் எளிதில் உதிரக்கூடியது, தழும்புகளை ஏற்படுத்துகின்றன; இலைக்காம்பு 5 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, மஞ்சள் நிறமான ரெசின் சுரக்ககூடிய சுரப்பிகளுடையது, ஓர் ஜோடி சுரப்பிகளை இலை அலகு காம்புடன் இணையுமிடத்தில் அலகின் பின்புறத்தில் கொண்டவை; இலை அலகு 27 X 12 செ.மீ., ஈட்டி வடிவம் முதல் நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி நீண்ட அதிக்கூரியது, அலகின் தளம் மழுங்கியது அல்லது வட்டமானது, ஆங்காங்கே மற்றும் ஒழுங்கற்ற பிளவுடையது-பற்களுடையது, மஞ்சள் நிறமான ரெசின் சுரப்பிகளை அலகின் பின்புறத்தில் கொண்டவை; மையநரம்பு அலகின் மேற்புறத்தில் அதன் பரப்பைவிட உயர்ந்தது; இரண்டாம் நிலை நரம்புகள் 15 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் தளம் நோக்கிய பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் ஓர்பாலானவை; மஞ்சரி பொதுவாக தண்டின் நுனியில் அல்லது இலைக்கோணங்களில் காணப்படுபவை, துருப்போன்ற உரோமங்களுடையது; ஆண்மலர்கள் வெளிறிய பச்சை நிறமானது.
கனி / விதை : வெடிகனி (கேப்சூல்), தெளிவான முட்களுடையது, ப்ரவுன் நிறமானது, ரெசின் போன்ற மஞ்சள் நிறமான சுரப்பிகளுடையது; விதைகள் அறைக்கு ஒன்றாக காணப்படும்.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக மிக உயர்ந்த மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில் 1350-1800 மீ. வரையுள்ள மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுகிறது - நீலகிரி மலைகள்.

சான்று ஏடு :

Bull. Bot. Surv. India 25: 199-201. 1983.

Top of the Page