மேஸ்டனஸ் ரோத்தியானா (Walp.) Ramam. - செலஸ்ட்ரேசி

இணையான பெயர் : ஜீம்னோஸ்போரியா ரோத்தீயானா Wt. & Arn.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய செடி அல்லது சிறிய மரம் 5 மீ. வரை வளரக்கூடியது
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் அமைப்பு; இலையடிச்செதில் முக்கோண வடிவமுடையது, உதிரக்கூடியது; இலைக்காம்பு 0.9-1.3 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 8.13 X 4-7 செ.மீ., நீள்வட்டம் முதல் தலைகீழ் முட்டை வடிவமுடையது, அலகின் நுனி சிறிய அதிக்கூரியது அல்லது கூரியது, அலகின் தளம் ஆப்பு வடிவம் முதல் அட்டனுவேட், அலகின் விளிம்பு ரம்ப பற்களுடையது அல்லது மிகச்சிறிய ரம்பபற்களுடையது, கோரியேசியஸ், உரோமங்களற்றது; இரண்டாம் நிலை நரம்புகள் 5-7 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் அமைப்பு கொண்டது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் கொத்தாக சிறு மஞ்சரி காம்புடன் இலைகள் உதிர்ந்த இலைக்கோணப்பகுதியில் தோன்றும்.
கனி / விதை : வெடிகனி (கேப்சூல்), 3-அறைகளுடையது; ஆறு விதைகள் கொண்டது, பத்திரி (ஏரிலேட்) உடையது.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1000 மீ. உயரம் வரையான மலைகளிலுள்ள பாதிக்கப்பட்ட பசுமைமாறாக்காடுகள் அல்லது பகுதி பசுமைமாறாக்காடுகளில் காணப்படுகிறது.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுகிறது - மத்திய மற்றும் மஹாராஷ்ட்ரா சயாத்திரி பகுதியில் காணப்படுகிறது.

சான்று ஏடு :

Indian For. 103(6): 387. 1977; Saldanha, Fl. Karnataka 2: 97. 1996; Cook, Fl. Bombay 1: 232. 1902.

Top of the Page