English   Kannada   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | மரங்கள் 10 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, முதிரும் போது கார்க் போன்றது; உள்பட்டை ப்ரவுன் நிறமானது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் நான்கு கோணங்களுடையது முதல் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கிட்டதட்ட வளையமானது, நுண்ணிய உரோமங்களுடையது. |
| இலைகள் : | இலைகள் கூட்டிலை, மூவ்விலை கூட்டிலைகள், எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கமானவை; மத்தியகாம்பு (ராக்கிஸ்) 3.5-11 செ.மீ. நீளமானது, இளம்பருவத்தில் நுண்ணிய உரோமங்களுடையது, பல்வினேட்; சிற்றிலைக்காம்பு 0.6-1.1 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், சிறிது உரோமங்களுடையது; சிற்றிலை 7-20 X 3-8.5 செ.மீ. (இளம்பருவத்தில் பெரியவை), நீள்வட்ட வடிவானது முதல் தலைகீழ் முட்டை வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் சமமற்றது அல்லது சிறிது அட்டனுவேட், அலகின் விளிம்பு முழுமையானது, சார்ட்டோசியஸ், ஒளிபுகும் சுரப்பி புள்ளிகளுடையது, உரோமங்களற்றது, அலகின் மேற்பரப்பு பளபளப்பானது; அலகின் பரப்பைவிட சிறிது பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 7-16 ஜோடிகள், நோரானது அல்லது சீராக வளைந்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் மெல்லியவை, அகன்ற வலைப்பின்னல் போன்றவை. |
| மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரி நன்கு கிளைத்த பேனிக்கிள் சைம் வகை; மலர்கள் பச்சை-வெள்ளை நிறமானது, காம்பற்றது. |
| கனி / விதை : | பாலிக்கிள், 4-அறைகளுடையது; ஒவ்வொன்றும் ஒர் விதையுடைய உருண்ட வடிவுடையது (காக்கை), கருப்பு நிறமானது. |