மெமிசிலான் டெக்கனன்ஸ் Clarke - மெலாஸ்டோமெட்டேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய குத்துச்செடி அல்லது சிறிய மரங்கள், 4 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : குறுத்திலுள்ள சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் நான்கு கோணங்களுடையவை, மெல்லியது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கமானவை; இலைக்காம்பு 0.2 செ.மீ., நீளமானது, உரோமங்களற்றது; இலை அலகு 6.5-1.5 X 1.5-2.8 செ.மீ., ஈட்டி வடிவானது, அலகு நுனி நீண்ட குறுகிய முனை, அலகின் தளம் வட்டமானது, அலகின் விளிம்பு முழுமையானது, கோரியேசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு அலகின் மேற்பரப்பைவிட பள்ளமானது, இண்ட்ராமார்ஜினல் நரம்பு (விளிம்பு நரம்பு) கொண்டது; இலை உலரும் போது இரண்டாம் நிலை நரம்புகள் சிறிதளவு கண்களுக்கு புலப்படக்கூடியது மற்றும் 15 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் கண்களுக்குப் புலப்படாது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி ஓர் தொகுப்பான சிறிய மஞ்சரி காம்புடைய சைம், தண்டின் பக்கவாட்டில் அமைந்தவை; அல்லி இதழ்கள் நீல நிறம்; புல்லி இதழ்கள் சிவப்பு நிறமானது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), கருப்பு நிறமானது; விதை ஒன்றுடையது.

வாழியல்வு :

அரிதானது, உயரம் குறைந்த மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளின் கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 800 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுகின்றன - தெற்கு சயாத்திரி மற்றும் வடக்கு மலபார் பகுதிகளில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Hooker, Fl. Brit. India 2: 560. 1879; Gamble, Fl. Madras 1: 505. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 181. 2004.

Top of the Page