மெமிசிலான் சுப்ரமணியை Henry - மெலாஸ்டோமெட்டேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய குத்துசெடிகளாக 4 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, பெரிய செதில்களாக காணப்படுபவை.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் தடித்தவை, நான்கு கோணங்களுடையது மற்றும் தண்டு குறுகிய இறகு போன்ற அமைப்புடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்குமானவை; இலைகாம்பு அற்றது அல்லது மிகச்சிறிய காம்புடையது (0.2 செ.மீ. நீளமானது), உரோமங்களற்றது; இலை அலகு 20-40 X 6-14 செ.மீ., நீண்ட ஈட்டி வடிவம் மற்றும் நீண்ட குறுகிய அதிக்கூரிய நுனியுடையது, அலகின் தளம் வட்டமானது அல்லது சிறிய இதய (கார்டேட்) வடிவானது, அலகின் விளிம்பு முழுமையானது, மெல்லிய கோரியேசியஸ், மையநரம்பு அலகின் மேற்பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் ஒன்றுக்கொன்று இணையானவை, மற்றும் விளிம்பில் இண்ட்ராமார்ஜினல் நரம்புடன் (விளிம்பு நரம்பு) இணைந்தவை, 24 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில், நெருக்கமற்ற மஞ்சரி காம்புடன் காணப்படும் அம்பல்லேட் சைம்; மஞ்சரிக்காம்பு 6-12 செ.மீ. நீளமானது, தடித்தது, நான்கு கோணங்களுடையது; மலர்கள் எண்ணற்றவை, நீலம் கலந்த ஊதா நிறமானது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), கோளவடிவானது, 0.8-1.2 செ.மீ. குறுக்களவுடையது, புல்லி இதழ்கள் கிரீடம் போன்றமைந்தவை, கனியும் போது கரும்ஊதா நிறமடைகிறது; விதை ஒன்று.

வாழியல்வு :

அரிதானது, சிறிய குத்துசெடிகளாக கீழ்மட்ட அடுக்கில் மிதமான உயரமுடைய மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில் குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 700-1100 மீ. வரையுள்ள மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படுபவை - கன்னிகட்டி மற்றும் வாளையார் காடுகளில் (அகஸ்த்திய மலை பகுதி) மட்டும் காணப்படுகின்றன.

தற்போதைய நிலை :

அழியக்கூடிய தருவாயில் (எண்டோன்ஜர்டு) உள்ளவை (ஐ.யூ.சி.எண்., 2000)

சான்று ஏடு :

J. Bombay Nat. Hist. Soc. 77: 492. 1980; Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 182. 2004.

Top of the Page