மிட்ரகைனா பார்விபோலியா (Roxb.) Korth. - ரூபியேசி

Vernacular names : தமிழ்ப் பெயர்: நீர்-கடம்பைமலையாளப் பெயர்: நீர்கடம்பு, விம்பா, சிறகடம்பு, கடம்பா, பூச்சாகடம்பு, ரோஸ்கடம்பு, வீம்பு.கன்னடப் பெயர்: நாய்கடம்பே, கோங்குஆங்கிலப் பெயர்: கைம்

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : இலையுதிர் மரம், 20 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, வழுவழுப்பானது, முதிரும் போது ஒழுங்கற்ற செதில்களாக உதிருபவை.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கோணங்களுடையது முதல் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கிட்டதட்ட வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கானவை; இலையடிச்செதில் இலைப் போன்றது அதன் தளம் படகு போன்றது, இலையடிச்செதில் இருஇலைக்காம்பிற்கு நடுவே (இண்டர்பீட்டியோலார்) உடையது, எளிதில் உதிரக்கூடியது மற்றும் தழும்புகளை ஏற்படுத்துகின்றன; இலைக்காம்பு 1-4 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 16 x 10 செ.மீ., முட்டை வடிவானது, நீள்வட்டம்-தலைகீழ் முட்டை வடிவானது முதல் ஆர்பிக்குலார், அலகின் நுனி சிறிது அதிக்கூரியதுடன் அதன் முனை மழுங்கியது, அரிதாக கூரியது, அலகின் தளம் கூரியது முதல் அட்டனுவேட் முதல் சிறிய இதய வடிவானது, அலகின் விளிம்பு முழுமையானது, கோரியேசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 6-10 ஜோடிகள், உரோமங்களுடைய டொமேசியா நரம்புகளின் கோணங்களில் உடையது; மூன்றாம் நிலை நரம்புகள் தளம் நோக்கிய இணையான அகன்ற பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தண்டின் நுனியில் காணப்படும் சீரமஞ்சரி; மலர்கள் காம்பற்றது, கீரிம்-வெள்ளை நிறமானது; புல்லி இதழ்கள் குட்டையானது.
கனி / விதை : வெடிகனி (கேப்சியூல்) கோள வடிவமான சீரமஞ்சரியில் அமைந்தவை, ஒர் கனி இரண்டு இலைப் போன்ற அமைப்பு கொண்ட உருண்ட வடிவுடையது (காக்கை); விதைகள் எண்ணற்றது, இறகுடையது.

வாழியல்வு :

பகுதி_பசுமைமாறாக்காடுகள் முதல் பசுமைமாறாக்காடுகளில் காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 900 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில்-முழுவதும் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Observ. Naucl. Ind. 19. 1839; Gamble, Fl. Madras 2: 585. 1993 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6: 222. 2004; Cook, Fl. Bombay 1: 581.1903; Almeida, Fl. Maharashtra 3:29. 2001.

Top of the Page