நாஜியா வாளிச்சியானா (C. Presl) Kuntze - போடொகார்ப்பேசி

Vernacular names : மலையாளப் பெயர்: நீராம்பளி

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : ஜீம்னோஸ்பொர்ம் மரங்கள் 30 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, ஒழுங்கற்ற தண்மையில் உரியக்கூடியது; உள்பட்டை பிங்க் நிறமானது.
இலைகள் : பில்லொடு எதிராக அமைந்தவை அல்லது கிட்டத்தட்ட எதிராக அமைந்தவை, குறுக்குமறுக்கானவை, மிகச்சிறிய காம்புடையது, உரோமங்களற்றது, 10-15 X 3-5 செ.மீ., குறுகிய நீள்வட்ட வடிவானது, நீள்வட்ட-ஈட்டி வடிவானது, அலகின் நுனி குறுகிய கூரியது, அலகின் தளம் அட்டனுவேட், அலகின் விளிம்பு முழுமையானது, நரம்புகள் எண்ணற்றவை, இணையானவை.
மஞ்சரி / மலர்கள் : ஸ்பொரான்ஜியல் அமைப்பானது கூம்பு (கோன்) வடிவானது; மகரந்தங்களை உருவாக்கும் கூம்பு (கோன்) இலைக்கோணங்களில் காணப்படுபவை, தனித்தவை; விதை உருவாக்கும் அமைப்பானது தண்டின் நுனியில் காணப்படும், தனித்தவை; காம்பு 1 செ.மீ. நீளமானது.
கனி / விதை : விதைகள் பச்சை நிறம், உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்) மாதிரி, முட்டை வடிவானது, சதைப்பற்றான கிண்ணத்தின் மேல் அமைந்தவை.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக, மிதமான உயரமுடைய மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில் குறிப்பாக 1000-1400 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில் - தெற்கு சயாத்திரி.

தற்போதைய நிலை :

மேற்கு_தொடர்ச்சி மலைகளில் இந்த ஒரோ வகை ஜீம்னோஸ்பொர்ம் மரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Top of the Page