ஆஸ்பெக்கியா ரெட்டிக்குலோட்டா Bedd. - மெலாஸ்டோமெட்டேசி

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய குத்துச்செடி 4 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் நான்கு கோணங்களுடையது, உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கானவை; இலைக்காம்பு 1 செ.மீ. நீளமானது, இலைக்காம்பு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களுடையது; இலை அலகு 5-8 X 2.5-4.5 செ.மீ., முட்டை வடிவானது, அலகின் நுனி கூரியது, அலகின் தளம் மெட்டையானது முதல் சிறிய இதய வடிவானது, அலகின் விளிம்பு முழுமையானது, கோரியேசியஸ், அலகின் மேற்பரப்பு கரும்பச்சை நிறம், கீழ்பரப்பு வெளிறிய நிறமானது, மேற்பரப்பு மற்றும் கீழ்பரப்பு உரோமங்களுடையது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; 5-7 _நரம்புகளை_தளத்திலே உடையது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தண்டின் நுனியில் காணப்படும் , 4-6 மலர்களுடையது; மலர்கள் பர்புள் நிறமானது; ஹைபான்தியம் அர்சியேலேட், 1.5 x 1.4 செ.மீ., உரோமங்களுடையது.
கனி / விதை : வெடிகனி (கேப்சியூல்) அர்சியேலேட்; விதைகள் எண்ணற்றவை.

வாழியல்வு :

சிறியமரமாக திறந்த புல்வெளி மற்றும் மிக உயரமான மலைகளிலுள்ள குட்டையான மரங்களுடைய பசுமைமாறாக்காடுகளின் விளிம்புகளில், குறிப்பாக 1800 மற்றும் 2400 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு_தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படும்- ஆனைமலை மற்றும் பழனி மலைகள்(தெற்கு சயாத்திரி).

சான்று ஏடு :

Trans. Linn. Soc. London 25: 216. 1865; Hooker, Fl. Brit. India 2: 520. 1879; Gamble, Fl. Pres. Madras 493: 1997; Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 184. 2004.

Top of the Page