பிட்டொஸ்போரம் டெட்ராஸ்பெர்மம் Wt. & Arn. - பிட்டொஸ்போரொசி

Vernacular names : தமிழ்ப் பெயர்: சுனரி மலையாளப் பெயர்: கச்சாபட்டா

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறியமரங்கள் 8 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது, மெல்லிய பிளவுகளுடையது; உள்பட்டை வெள்ளை நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களுடையது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போல் அமைந்தது, பொரும்பாலும் சிறுகிளைகளின் நுனியில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாக காணப்படும்; இலைக்காம்பு 1.5-2 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், இளம்பருவத்தில் சிறிய உரோமங்களுடையது; இலை அலகு 5-10 X 2-4 செ.மீ., தலைகீழ் முட்டை வடிவானது முதல் தலைகீழ் ஈட்டி வடிவானது அல்லது குறுகிய நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி கூரியது முதல் சிறிய அதிக்கூரியது, சிலசமயங்களில் மெட்டையானது, அலகின் தளம் ஆப்பு வடிவானது, அலகின் விளிம்பு முழுமையானது; சப்கோரியேசியஸ், அலகின் கீழ்பரப்பு வெளிறியது, உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட சிறிது பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 9 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி ரெசீம்; மலர்கள் கிரீம் நிறமானது; மலர்காம்பு 0.5 செ.மீ. நீளமானது.
கனி / விதை : வெடிகனி (கேப்சியூல்), 2 அறைகளுடையது, ca. 1 செ.மீ. குறுக்களவுடையது; விதைகள் 4.

வாழியல்வு :

பசுமைமாறாக்காடுகளின் விளிம்புகளில் காணப்படுபவை, கடல் மட்டத்திலிருந்து 1600 மீ. உயரத்திற்கு மேலுள்ள மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

தீபகற்ப இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில் - ஆனைமலை, பழனி மலைகள் மலைகள், நீலகிரி மற்றும் பாபாபுடான்கிரி மலைகள்.

சான்று ஏடு :

Wight & Arn., Prodr. 154. 1834; Gamble, Fl. Madras 1: 55. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 34. 2004; Saldanha, Fl. Karnataka 1: 358. 1984.

Top of the Page