புருனஸ் சைலானிக்கா (Wt.) Miq. - ரோஸ்யெசி

இணையான பெயர் : பைஜியம் கார்ட்நரி J. Hk.; பைஜியம் வைட்டியானம் Bl. ex Muell

Vernacular names : தமிழ்ப் பெயர்: பாலன்கச்சி, ஆட்டநாரை, ஆட்டன்ரிகோங்கு, முட்டைநாரி கோங்கு.மலையாளப் பெயர்: ஆட்டாநாரிபொங்கு, இராட்டானி, நாய்கம்பகம், நாய்தாம்பாகம், ரெட்டியன்.

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய மரங்கள் 20 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, ஒழுங்கற்ற பெரிய செதில்களாக உதிருபவை, சிலசமயங்களில் உரியக்கூடியது; உள்பட்டை சிவப்பு நிறமானது, கசப்பு அல்மாண்ட் அல்லது மூட்டைப் பூச்சி மணம் உடையது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, நுண்ணிய உரோமங்களுடையது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு_வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலையடிச்செதில் எளிதில் உதிரக்கூடியவை மற்றும் தழும்புகளை ஏற்படுத்தவல்லது; இலைக்காம்பு 0.6-2.8 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 7-17 X 2.5-6.5 செ.மீ., முட்டை வடிவானது முதல் முட்டை-ஈட்டி வடிவானது, அலகின் நுனி சீராக அதிக்கூரியதுடன் அதன் முனை மழுங்கியது, திருகியது, அலகின் தளம் வட்டமானது அல்லது சமமற்றது, சிலசமயங்களில் அட்டனுவேட், அலகின் விளிம்பு முழுமையானது, கோரியேசியஸ், உரோமங்களற்றது, அலகின் கீழ்பரப்பில் தளத்திற்கு அருகாமையில் ஒர் ஜோடி சுரப்பிகளுடையது, சிலசமயங்களில் அலகின் நீளத்தில் பாதிக்கு மேல் பகுத்யில் சுரப்பிகளுடையது, அரிதாக சுரப்பிகளற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது, சிவப்பு நிறமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 6-8 ஜோடிகள், இளம்பருவத்தில் சிவப்பு நிறமானது, நுனி நோக்கி வளைந்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல்-பெர்க்கரண்ட் அமைப்பு கொண்டது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படும் ரெசீம்; மலர்கள் வெள்ளை நிறமானது.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), 2-அறைகளுடையது, உரோமங்களற்றது; விதைகள் 2, தட்டையானது.

வாழியல்வு :

மிதமான உயரமுடைய (சப்கேனோப்பி) மரமாக பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக 400-2600 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில் - முழுவதும் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Fl. Ind. Bat. 1.387. 1857; Trans. Linn. Soc. London 13. 103. 1821; Gamble, Fl. Madras 1: 439. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 165. 2004; Saldanha, Fl. Karnataka 1: 369. 1984; Cook, Fl. Bombay 1: 458.1903; Almeida, Fl. Maharashtra 2:228. 1998

Top of the Page