(ப)சைக்கோட்ரியா டால்ஜெல்லி J.Hk. - ரூபியேசி

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய குத்துச்செடி அல்லது சிறிய மரம் 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது முதல் தட்டையானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கானவை; இலையடிச்செதில் காம்புகளுக்கிடையே (இண்ட்ராபீட்டியோலார்) உடையது, இலைகளைப் போன்றது, ஈட்டி வடிவானது, தண்டிற்க்கு உறைப்போன்றது, உரோமங்களற்றது; இலைக்காம்பு 1-2 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 12-25 X 4.5-10.5 செ.மீ., தலைகீழ் முட்டை வடிவானது அல்லது தலைகீழ் ஈட்டி வடிவானது, அலகின் நுனி மெட்டையானது அல்லது வட்டமானது மற்றும் குட்டையான அதிக்கூரியது, அலகின் தளம் ஆப்பு வடிவானது முதல் டெக்கரண்ட், அலகின் விளிம்பு முழுமையானது, தடித்த கோரியேசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 12-20 ஜோடிகள், இணையானவை; மூன்றாம் நிலை நரம்புகள் மற்றும் பிற நரம்புகள் கண்களுக்கு புலப்படாது அல்லது அகன்ற வலைப்பின்னல் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி அனைத்து பக்கங்களில் கிளைத்தவை மற்றும் கிளைகள் சீரமஞ்சரியில் முடிவடைகின்றன; பூவடிச்செதில் மற்றும் சிறுபூவடிச்செதில் பெரியவை, நிரந்தரமானது; மலர்கள் வெள்ளை நிறமானது, காம்பற்றது அல்லது மிகச்சிறிய காம்புடையது.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), முட்டை வடிவானது, 1 செ.மீ. நீளமானது, கனியின் நுனியில் நிரந்தரமான புல்லி இதழ்கள் உடையது, 2 பைரீன் உடையது; ஒவ்வொரு பைரீனிம் ஒர் விதையுடையது.

வாழியல்வு :

மழை அதிகம் பெறும் பசுமைமாறாக்காடுகளில் கீழ்மட்ட அடுக்கில் (அன்டர்ஸ்டோரி) காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 700 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படும்-மத்திய சயாத்திரி பகுதிகளில் காணப்படுபவை.

சான்று ஏடு :

Fl. Brit. India 3: 163. 1880; Gamble, Fl. Madras 2: 640. 1993 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6: 231. 2004; Cook, Fl. Bombay 1: 616.1903; Almeida, Fl. Maharashtra 3:54. 2001.

Top of the Page