ரப்பானியா வைட்டியானா Mez. - மிர்சினியெசி

இணையான பெயர் : மிர்சைன் கேப்பிடுலேட்டா Wall. ரகம் லான்சியோலேட்டா Cl.; மிர்சைன் வைட்டியானா Wall. ex DC

Vernacular names : மலையாளப் பெயர்: சீராமரம்

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறியமரங்கள் 10 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது; உள்பட்டை சிவப்பு நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது இலைகள் உதிர்ந்ததால் உண்டாகும் தழும்புகளை ஏற்படுத்துகின்றன.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போல் அமைந்தது, சப்வர்டிசில்லேட்; இலைக்காம்பு 0.5-1 செ.மீ. நீளமானது, இலைக்காம்பு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 4-8 x 1-2.3 செ.மீ., நீள்வட்ட-தலைகீழ் ஈட்டி வடிவானது, அலகின் நுனி மெட்டையானது, அலகின் தளம் அட்டனுவேட், அலகின் விளிம்பு முழுமையானது, ஒளிபுகும் சுரப்பி புள்ளி மற்றும் கோடுகளுடையது, உரோமங்களற்றது, கோரியேசியஸ்; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் மற்றும் மூன்றாம் நிலை நரம்புகள் கண்களுக்கு புலப்படாது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி காம்பற்றது அல்லது சிறிய மஞ்சரிகாம்புடைய அம்பல் வகை மஞ்சரி; மலர்கள் பாலிகோமஸ்.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), கோளவடிவானது, சூலகத்தண்டு நிரந்தரமானது; ஒரு விதையுள்ள கனி.

வாழியல்வு :

மிக உயரமான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளின் விளிம்புகளில் காணப்படுபவை குறிப்பாக 1600 மற்றும் 2200 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

தென்இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில் - தெற்கு சயாத்திரி மற்றும் நீலகிரி, மற்றும் அரிதாக மத்திய சயாத்திரி மலைகளில் காணப்படுபவை.

சான்று ஏடு :

Trans. Linn. Soc. London 17: 106. 1834; Gamble, Fl. Madras 2: 751.1993 (re.ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 266. 2004; Saldanha, Fl. Karnataka 1: 352. 1984; Cook, Fl. Bombay 2: 83. 1908.

Top of the Page