சாஜ்ரேயா கிரன்டிபொளரா Dunn. - அனோனேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரம், 18 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு 0.8-0.9 செ.மீ, நீளமானது; இலை அலகு 25-35 X 7-8 செ.மீ., நீள்சதுரம், அலகின் நுனி சிறிய அதிக்கூரியது, அலகின் தளம் வட்டமானது, உரோமங்களற்றது; இரண்டாம் நிலை நரம்புகள் 10
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் முதிர்ந்த கிளையில் தோன்றுபவை (காலிஃபுளோரஸ்), கொத்தாக இலை உதிர்ந்த பகுதிக்கு கீழே தோன்றக்கூடியது.
கனி / விதை : கொத்தான முழுச்சதைகனி (பெர்ரி), உரோமங்களற்றது, பல விதைகளை கொண்டது.

வாழியல்வு :

மிதமான உயரமுடைய (சப்கேனோப்பி) மரமாக, கடல் மட்டத்திலிருந்து 400 மீ. உயரம் வரை உள்ள பசுமைமாறாக்காடுகளில் காணப்படும்.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் (என்டமிக்)- அரிதாக தெற்கு சயாத்திரி பகுதியில் காணப்படும்.

தற்போதைய நிலை :

அழியக்கூடிய தருவாயில் (எண்டோன்ஜர்டு) உள்ளவை (ஐ.யூ.சி.எண்., 2000)

சான்று ஏடு :

Bull. Misc. Inf. Kew 1914: 182. 1914; Gamble, Fl. Madras 1: 12. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 20. 2004.

Top of the Page