செஃப்லீரா கேப்பிடேட்டா (Wt. & Arn.) Harms - ஆரல்லியேசி

இணையான பெயர் : பேரட்ரொப்பியா கேப்பிடேட்டா Wt. & Arn.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரம், 15 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : எளிதில் உதிரக்கூடிய சிறியமுட்கள் (ப்ரிக்கிள்) கொண்டவை.
இலைகள் : கைவடிவகூட்டிலைகள், புதியதாய் தோன்றும் இலைகள் மெல்லிய உரோமங்களுடையது, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; கூட்டிலைக்காம்பு பல்வினேட் மற்றும் தளத்தில் அகன்று தண்டை சுற்றியவாறு காணப்படும்; இலையடிச்செதில்கள் இலைக்காம்புடன் ஒட்டியவாறு காணப்படுபவை; சிற்றிலைகளின் காம்பு 5 செ.மீ. நீளமானது; ஒர் கூட்டிலையில் சிற்றலைகள் 6-8 (அரிதாக 11 வரை) அமைந்தவை, சிற்றிலையின் அலகு 8-17.5 X 3.8-5.5 செ.மீ., நீள்வட்டம்-நீள்சதுர வடிவானது, அலகின் நுனி கூரியது அல்லது அதிக்கூரியது, அலகின் தளம் வட்டமானது அல்லது அகன்ற சதுரமானது (ட்ரன்கேட்), கோரியேசியஸ்; மையநரம்பு அலகின் பரப்பைவிட மேல் எழும்பியது; இரண்டாம் நிலை நரம்புகள் 13-16 ஜோடிகள், மெல்லியது; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னலுடையது.
மஞ்சரி / மலர்கள் : தடித்த தண்டுகளில் அம்பல் வகை பேனிக்கிளாக அமைந்தவை.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்); விதைகள் தட்டையானது

வாழியல்வு :

மிக உயரமாக வளரும் இம்மரங்கள் உயரமான மலைகளில் (கடல் மட்டத்திலிருந்து 1400-2200 மீ.) பசுமைமாறாக்காடுகளிலும் மற்றும் மிதமான உயரமுடைய மலைகளிலுள்ள (கடல் மட்டத்திலிருந்து 800-1400 மீ.) பசுமைமாறாக்காடுகளின் விளிம்புகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுபவை - பரவலாக நீலகிரி ஆனைமலை மற்றும் பழனி மலைகளிலும், மற்றும் பிற தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி பகுதியிலும் ஆங்காங்கே காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Engler & Prantl, Naturl. Pflanzenfam. 3(8): 36. 1894; Gamble, Fl. Madras 1: 568. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 206-207. 2004; Saldanha, Fl. Karnataka 2: 274. 1996.

Top of the Page